நம்ப ஊர்ல நடக்கும் அக்கிரமங்களில் உச்சகட்டமாக இந்த சம்பவம் திகழ்கிறது. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் மெயின் ரோட்டில் உள்ள சுல்தான் கடை பகுதி. இந்த இடத்தில் வசிக்கும் 18 வயதுகூட முடியாத சிறுவன் மற்றும் குளச்சல் பகுதியை சேர்ந்த மாணவி இருவரும் ஸ்கூல் படிக்கும் காலத்தில் இருந்து காதலித்து வந்துள்ளனர். சுமார் 6 வருடங்களுக்கு மேல் ஊர் சுற்றி திறந்த இவர்களின் காதல் காலேஜ் வரை நீடித்தது பெரிய விஷயம்.
காதல் மீது இவ்ளோ நம்பிக்கை வேண்டாம்!
இப்பொழுது தான் வாழ்க்கையின் எதார்த்தத்தை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி தான் அந்த சிறுவனுக்கும் தெரிந்துள்ளது. ஸ்கூலில் இருந்த தன்னுடைய காதலிக்கும், காலேஜ் சென்ற பின்னர் இருக்கும் தன்னுடைய காதலிக்கும் நிறைய வித்தியாசங்கள் ஏற்பட்டதை அவன் உணர்ந்து கொண்டான். காலேஜ் சென்ற பிறகு நிறைய ஆண் நண்பர்களுடன் பழக்கம் வைத்துக்கொண்ட அவனின் காதலில் அவர்களுடன் பைக்கில் கட்டி அணைத்து ஊர் சுற்றுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தான். பிறகு தன் காதலியை தீவிரமாக கண்டித்துள்ளான். இதற்கு இடையில் அவனின் நண்பர்கள் அவளைப் பற்றி தவறாக நிறைய முறை கூறியுள்ளனர். ஆனால் தன்னுடைய காதலியின் மீது உள்ள நம்பிக்கையாலும், காதலாலும் அவன் அது எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை.
நீயும் ஜாலியா இரு..
பிறகு இவர்கள் இருவருக்கும் அடிக்கடி இதை வைத்து சண்டை நடைபெற்றுள்ளது. பிறகு அந்த காதலி " என்னை மட்டும் எப்பையுமே நம்பாத...வாழ்க்கையை ஜாலியா என்ஜாய் பண்ணி வாழு...நான் இப்படி தான் இருப்பேன்...நீயும் வாழ்க்கைய ஜாலியா என்ஜாய் பண்ண பழகிக்கோ...பிடிச்சா பழகு இல்லைனா உன் இஷ்டம்" எண்டு காதலனிடம் கூறியுள்ளார். இதை கேட்டதும் மனம் உடைந்து போன காதலன், அவளை எப்படி திருத்துவது என்று தெரியாமல் தவித்துப்போனான்.
சரக்கு பார்ட்டி மற்றும் ஜாயின்ட்
இந்த சமயத்தில் குளச்சல் பகுதியில் யாருமே இல்லாத பங்களாவில் தோழிகளுடன் தன் காதலி பிறந்த கொண்டாட போவதாக அவனுக்கு தகவல் கிடைத்தது. உடனே விரைந்து அந்த இடத்திற்கு சென்ற அவன் அங்கு மாடியில் நடந்த அக்கருமங்களை பார்த்து வாழ்க்கையை வெறுத்துவிட்டான். மாடியில் 4,5 தோழிகளுடன் ஆண் நண்பர்களும் சேர்ந்து அரைகுறை டிரஸூடன் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தனர். அதுவும் தலை கால் தெரியாத அளவிற்கு போதையுடன் ஆடிக்கொண்டிருந்தனர்.
விட்டேன் ஒரு அறை
அதனை பார்த்து கோபத்தின் உச்சிக்கு சென்ற காதலன் அங்கிருந்த ஆண் நண்பர்களை அடித்து ஓடவிட்டான். பிறகு தன்னுடைய காதலியை பளார் பளார் என்று முகத்தில் 2 அறை விட்டான். பின்னர் மீதி இருந்த மற்றவர்களும் தெறித்து ஓடிவிட்டனர். காதலனின் அறையால் கன்னம் பழுத்து போனது. பிறகு வீட்டில் பெற்றோர் பார்த்து என்ன கன்னம் இப்படி இருக்கு, யார் என்ன பண்ணா? என்று கேட்டதும், காதலன் அறைந்து விட்டான் என்று கூறியுள்ளார். அவளை மருத்துவமனையில் சேர்த்த பிறகு போலீஸ் இடம் சென்று தன் மகளின் காதலன் மேல் புகார் அளித்துள்ளனர்.
போலீஸே ஷாக் ஆகிட்டாங்க!
புகாரை பெற்ற உடன் விசாரணையை தொடங்கிய போலீஸார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று திகைத்து போயினர். யாருமே இல்லாத பங்களாவில் ஏன் பிறந்த நாள் கொண்டாட வேண்டும்? என்று கேள்விக்கு தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர் அந்த பங்களாவுக்கு உள்ளே சென்று பார்த்த பொழுது சிகரெட் துண்டுகள், கிழித்து வீசப்பட்ட ட்ரெஸ், மது பாட்டில், ஸ்னாக்ஸ், ஆணுறைகள் என சிதறிக்கிடந்துள்ளது.
கான்செப்ட் + சரக்கு பார்ட்டி + ஜாயின்ட்
அதனை பார்த்த உடன் தான் தெரியவந்தது அது பிறந்த நாள் பார்ட்டி இல்ல மது விருந்து மற்றும் பாலியல் சம்பவங்கள் நடந்துள்ளது என்று. அந்த பார்ட்டியில் பங்கேற்றவர்களுக்கு கான்செப்ட் + சரக்கு பார்ட்டி + ஜாயின்ட் என்று யாருக்கும் சந்தேகம் வராத பாணியில் மெசேஜ் வந்தது தெரியவந்துள்ளது. அதற்கு அர்த்தம் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள் மது அருந்திவிட்டு அங்கிருக்கும் ஆண் நண்பர்களுக்கு பெண் தோழிகள் படுக்கை விருந்து வைப்பார்களாம். இந்த அதிர்ச்சி தகவல் தெரிந்ததும் இதில் யாரெல்லாம் பங்கேற்றுள்ளனர் என்று போலீஸ் தேட ஆரம்பித்துள்ளனர்.
எல்லாரும் படிக்கிற பிள்ளைகள் என்பதால் ரகசிய முறையில் விசாரணை மேற்கொண்ட போலீஸ் கண்டுபிடித்த பிறகு அவரவர் பெற்றோர்களிடம் உண்மையை கூறிவிடலாம் என்று முடிவு செய்துள்ளனர்.
வசமாக சிக்கிய ஆடியோ
அதற்குள் போலீஸ்-க்கு இந்த விஷயம் தெரிந்துவிட்டது என்று ஒரு மாணவிக்கு தெரிந்ததும், பயத்தில் கதிகலங்கி நிற்கின்றனர். இருப்பினும் இதற்கு பின்னர் இவர்களுக்கு அதே மெசேஜ் வந்துள்ளதாம். பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தோழிகள் போனில் பேசிய ஆடியோவை போலீஸ் கண்டுபிடித்துள்ளனர். இதனை சம்மந்தப்பட்ட நபர்களின் பெற்றோர்களிடம் போலீஸ் பொடுகாட்டியுள்ளனர். அதை கேட்டதும் உடைந்து போய் உள்ளனர் பெற்றோர்கள்.
யார் காரணம்?
பிள்ளைகளின் எதிர்காலம் நல்லா இருக்கனும் என்று அயலாது உழைக்கும் பெற்றோர்கள் மற்றும் பெண் பிள்ளைகள் வெளியே சென்றால் வீட்டிற்கு பத்திரமாக வரும் வரை வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கும் பெற்றோர்கள் பற்றி இந்த தலை முறை சிறிதும் நினைக்கவே இல்லை. இதற்கு காரணம் ஒழுங்காக கண்டிக்காத பெற்றோர்களா? சோசியல் மீடியாவா? இல்லை சமுதாயமா? யார் இந்த நெட்வொர்க் எதற்கு இப்படி செய்கிறார்கள் என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர் போலீஸ்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…