Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தேசிய கல்வி கொள்கை அவசியமில்லை....தமிழக அரசு அதிரடி..!

madhankumar June 22, 2022 & 12:43 [IST]
தேசிய கல்வி கொள்கை அவசியமில்லை....தமிழக அரசு அதிரடி..!Representative Image.

மாணவர் சேர்க்கையிலும் கல்வியிலும் இந்திய அளவில் தமிழகம் 15 ஆண்டுகள் முன்னோக்கி பயணித்து வருகிறது. எனவே எங்களுக்கு தேசிய கல்வி கொள்கை அவசியமில்லை என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் புதிய தேசிய கல்வி கொள்கையை அமுல்படுத்தக்கோரி கடலூரை சேர்ந்த அர்ஜுனன் இளையராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளர், உயர் கல்வி மற்றும் பள்ளிக்கல்வித் துறை செயலாளர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில்மனுவில், கல்வி கொள்கை என்பது மாநிலத்தின் கொள்கையை சார்ந்தது. தேசிய கல்வி கொள்கையில் எந்தவித சட்டபூர்வ அங்கீகாரமும் இல்லாத விரைவாக உள்ளது.

தமிழகதில் தற்போது நடைமுறையில் உள்ள 69 சதவிகித இடஒதுக்கீடு, பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு, மேலும் தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேளையில் முன்னுரிமை என தரப்பினரையும் ஒருங்கிணைத்து சமத்துவமான கல்வி என்ற அடித்தளத்தை கொண்டுள்ள மதச்சார்பற்ற தமிழகத்தில், இரு மொழிக்கொள்கையும், தாய்மொழியில் அடிப்படைக் கல்வியும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த தேசியக்கல்வி கொள்கையானது இந்திய அளவில் 2023க்குள் 50 சதவிகித மாணவர் சேர்க்கையை கொண்டுவருவது என கூறப்படுகிறது. தமிழகத்தில் தரமான இலவசக்கல்வி, மதிய உணவு, இலவச புத்தகம், சீருடை,சைக்கிள், காலணி, லேப்டாப், கல்வி உதவித்தொகை வழங்குவதால் மொத்த மாணவர் சேர்க்கைவிகிதம் தற்போது 51.4 சதவீதமாகஉள்ளது. 

இது தற்போதைய தேசிய சராசரியை காட்டிலும் இரண்டுமடங்கு அதிகம் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள 38 மாநிலங்களி்ல் 18 மாநிலங்கள் தேசிய சராசரியைக் காட்டிலும் குறைவாக உள்ளது. ஆனால் தமிழகம் தேசிய கல்வி கொள்கையைக்காட்டிலும் கல்வியில் சிறந்து விளங்கி 15 ஆண்டுகளுக்கு முன்னோக்கி பயணித்து வருகிறது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்