Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில்.. எப்போதிலிருந்து..? | Chennai to Bengalore Bullet Train

Nandhinipriya Ganeshan Updated:
சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில்.. எப்போதிலிருந்து..? | Chennai to Bengalore Bullet TrainRepresentative Image.

புல்லட் ரயில் என்றாலே ஜப்பான், சீனா போன்ற பெரும்நகரங்கள் தான் நம்மில் பலருக்கும் நினைவிற்கு வரும். இதற்கிடையில், நமது நாட்டிற்கும் புல்லட் ரயில் வருமா என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது அந்த ஏக்கத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட உள்ளது. அதாவது, மும்பை டூ அகமதாபாத் வழித்தடத்தில் 508 கிலோமீட்டர் தூரத்திற்கு புல்லட் ரயில் இயக்க அடித்தளம் போடப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டின் நிதியுதவி உடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் காரணமாக காலதாமதம் ஆன நிலையில் தற்போது பிரச்சினைகள் ஓரளவுக்கு முடிந்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனவே, வரும் ஆகஸ்ட் 2026க்குள் இந்தியாவில் புல்லட் ரயில் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, இந்தியாவின் முதல் புல்லட் ரயில் என்ற பெருமையை மும்பை - அகமதாபாத் வழித்தடம் பெறவுள்ளது. இதையடுத்து பிற நகரங்களிலும் விரிவுபடுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படும். இதற்காக மத்திய அரசு தற்போதே திட்டங்களை உருவாக்கி வைத்திருக்கிறது. அவற்றில், சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில் சேவையும் உள்ளது. 

தற்போது, சென்னை டூ மைசூரு வழித்தடத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை பயன்பாட்டில் உள்ளது. இது பெங்களூரு வழியாக செல்வது குறிப்பிடத்தக்கது. அதேபோல் புல்லட் ரயிலும் சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூரு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புல்லட் ரயில் சேவை 2051 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் வகையில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று சொல்லப்படுகிறது. அப்படி பயன்பாட்டிற்கு வந்தால் தென்னிந்தியாவின் முதல் புல்லட் ரயில் என்ற பெருமையை பெறும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்