Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பெண்கள் திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும்: முன்னாள் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு....!

Baskaran. S Updated:
பெண்கள் திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும்: முன்னாள் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேச்சு....!Representative Image.

சென்னை: பெண்கள் தன்னம்பிக்கையோடு, திறன்களை வளர்த்துக் கொண்டு சமூகத்தில் மேம்பட வேண்டும் என முன்னாள் இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்ய பவன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு அவள் முன் முயற்சி, பெண் மற்றும் பெண் அனுபவங்கள் என்ற தலைப்பில் 3 பாகங்கள் கொண்ட புத்தகங்களை முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அவர், வாய்ப்பு கிடைத்ததால் 70 சதவீதம் கல்லூரி மாணவிகள் தங்க பதக்கம் வாங்குகின்றனர்.

இந்திய பெண்கள் போர் வீரர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வாழ்க்கை திறன்களை பற்றியும்,  கல்வி, சுகாதாரம், பாதுகாப்பான சமூக மற்றும் பொருளாதார வாய்ப்புகள் பற்றியும், குறிப்பாக பின்தங்கிய பின்னணியில் உள்ள பெண்களுக்கு திறன்கள் மிகவும் இன்றியமையாததாகிறது. ஒருவருடைய வாழ்க்கைத் திறன்களை வளர்த்துக் கொள்வது அவசியமானது ஒன்று. 

தகவலறிந்த முடிவுகளை எடுக்கவும், அதிக ஸ்திரத்தன்மையை கொண்டு வரவும், அவர்களின் தன்னம்பிக்கையை மேம்படுத்தவும், சமூகங்களை மேம்படுத்தவும் இது அவர்களுக்கு உதவுகிறது. இன்றும் சாதி அடிப்படையில் பாகுபாடு உள்ளது. இந்தியாவில் 19 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழேயும், 20 சதவீதம் பேர் எழுத்தறிவு இல்லையென்றும், அடிப்படை திறமைகளை பெண்கள் வளர்த்து கொண்டால் ஆண்களை சார்ந்து இருக்காமல் பொருளாதார ரீதியாக மரியாதையுடன் வாழ்க்கையில் உயரலாம். 

கீழ்மட்டத்தில் இருப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு என்பது கருணையோ, சேவையோ கிடையாது அது அவர்களுக்கான உரிமையாகும். தற்போது ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளுக்காக அதிக முக்கியதுவம் கொடுக்க வேண்டும். பெண்கள் மரியாதையோடு, உரிய வாய்ப்பும் வழங்க வேண்டும். இந்தியா உலகில் 5 இடத்தில் பொருளாதார இடத்தில் இருக்கும் நான் விரைவில் 3வது இடத்தில் உள்ளோம், ஆகையால் பெண்களுக்கு உரிய வாய்ப்பு வழங்க வேண்டும்.

ராணி அஹில்யா பாய் ஹோல்கர், ராணி துர்காவதி, ராணி ஜிஜா பாய், ரசியா சுல்தானா & ராணி வேலு நாச்சியார் போன்ற வீர பெண்கள் வரலாறு நிறைந்தவையாக இந்திய வரலாறு உள்ளது என சுட்டிக்காட்டி, பெண்கள் மத்தியில் ஊக்கப்படுத்தி உரையாற்றினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்