Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

நயன் - விக்னேஷ் திருமணம்.. முதல்வருக்கு நேரில் அழைப்பு!!

Sekar June 05, 2022 & 10:13 [IST]
நயன் - விக்னேஷ் திருமணம்.. முதல்வருக்கு நேரில் அழைப்பு!!Representative Image.

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும், பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ள நிலையில், இருவரும் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரடியாக சந்தித்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன் - விக்னேஷ் திருமணம்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் நீண்டகாலமாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் தற்போது ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள உள்ளனர். மகாபலிபுரத்தில் நடக்க உள்ள இந்த திருமணத்திற்கு நயன் மற்றும் விக்னேஷ் ஜோடி அழைப்பிதழ்களை வழங்கி வருகின்றனர்.

முதல்வருக்கு அழைப்பிதழ்

இந்நிலையில், தமிழக முதல்வரை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா சந்தித்து ஜூன் 9ஆம் தேதி நடைபெறும் தங்களது திருமணத்திற்கு வருகை தந்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும், முதல்வரும் கண்டிப்பாக வருவதாக கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பின்போது நடிகரும், தயாரிப்பாளரும், திமுக எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார். இதற்கான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்