Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பெண்ணிடம் அவதூறு.. பாஜக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸ்?

Sekar August 06, 2022 & 16:28 [IST]
பெண்ணிடம் அவதூறு.. பாஜக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸ்?Representative Image.

உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு பாஜகவைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் ஒரு அரசியல்வாதி, வீட்டு வசதி சங்கத்திற்குள் தகராறு செய்த பின்னர் ஒரு பெண்ணைத் தாக்கியதாக நொய்டா காவல்துறையால் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அரசியல்வாதியான ஸ்ரீகாந்த் தியாகி பிஜேபியின் கிசான் மோர்ச்சாவின் உறுப்பினர் என்று கூறப்படும் நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களுடனான அவரது படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், அவருக்கு பாஜகவுடன் தொடர்பில்லை என்று கட்சியின் உள்ளூர் பிரிவு விளக்கமளித்துள்ளது. 

இந்நிலையில் ஸ்ரீகாந்த் தியாகியின் மனைவி, உறவினர் மற்றும் இரண்டு வீட்டு உதவியாளர்களை நொய்டா காவல்துறை தடுத்து வைத்து, தலைமறைவான தியாகியைப் பற்றி விசாரித்து வருகிறது.

நடந்தது என்ன?

நொய்டாவின் செக்டர்-93பி இல் உள்ள கிராண்ட் ஓமேக்ஸ் சொசைட்டியில் பகலில், ஸ்ரீகாந்த் தியாகி சில மரங்களை நடுவதற்குப் பெண் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், ​அவர் மரங்களை நடுவதற்கு தனக்கு உரிமை உண்டு என்று கூறியுள்ளார். பின்னர் இது இருவருக்கும் இடையே வாக்குவாதமாக மாறியுள்ளது.

வீடியோ வைரல்

இந்த சம்பவத்தை ரெகார்ட் செய்த பலர் வீடியோக்களை சமூக ஊடகங்களில் கசிய விட்டுள்ளனர். அதில் ஒன்று ஒன்று தியாகி கோபத்தில் கடுமையாக சொற்களை பயன்படுத்துவதையும், பெண்ணைத் தாக்குவதையும் காட்டுவதாகக் உள்ளது. மேலும் அந்த பெண்ணின் கணவரை அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி, தரக்குறைவாகவும் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது.

போலீசார் வழக்குப்பதிவு

வீடியோ வைரலான நிலையில், ஸ்ரீகாந்த் தியாகி மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த உள்ளூர் போலீஸ் குழு மாலையில் வீட்டுவசதி சங்கத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால் தியாகி தனது வீட்டின் கதவுகளைத் திறக்கவில்லை. 

அவர் தனது வளர்ப்பு நாய்களை போலீஸ் அதிகாரிகள் மீது கட்டவிழ்த்து விடுவதாக மிரட்டியுள்ளார். பின்னர் தியாகி தலைமறைவாகி விட்ட நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் தியாகி கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜகவுடன் தொடர்பு?

தியாகி தன்னை பாஜகவின் கிசான் மோர்ச்சாவின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், ஆளும் கட்சியின் யுவ கிசான் சமிதியின் தேசிய இணை ஒருங்கிணைப்பாளராகவும் சமூக ஊடகங்களில் அடையாளப்படுத்திக் கொள்கிறார். இதற்கிடையில், பாஜகவின் நொய்டா பிரிவு தலைவர் மனோஜ் குப்தா, தியாகிக்கு கட்சியுடன் தொடர்பில்லை என விளக்கமளித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்