Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

லாரியின் முன்புறம் இளைஞரை கட்டி ஓட்டிச்சென்ற ட்ரைவர்கள்...ஒடிசாவில் பயங்கரம்..!

madhankumar May 26, 2022 & 12:10 [IST]
லாரியின் முன்புறம் இளைஞரை கட்டி ஓட்டிச்சென்ற ட்ரைவர்கள்...ஒடிசாவில் பயங்கரம்..!Representative Image.

ஒடிசாவின் கேந்திரபாடா மாவட்டத்துக்கு உட்பட்ட திகர்பங்கா கிராமத்தை சேர்ந்த கஜேந்திரா ஸ்வைன் (வயது 28) இவர் அந்த பகுதிகளில் பகுதி நேரமாக லாரி டிரைவராக வேலைபார்த்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில்  கடந்த 22-ந்தேதி ஜெகத்சிங்பூர் மாவட்டத்தில் லாரி டிரைவர்களை சந்தித்து வேலை கேட்டுக்கொண்டிருந்தார்.  துறைமுகம் அருகே உள்ள புடாமண்டல் பாலத்துக்கு அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளின் டிரைவர்களிடம் வேலை கேட்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது ஒரு லாரியை நோக்கி வேலை கேட்பதற்காக இவர் சென்றபோது ஒரு ட்ரைவர் தனது செல்போனை காணவில்லை என சத்தம் போட்டுள்ளார். உடனே மற்ற டிரைவர்கள் இவன்தான் செல்போனை திருடியிருக்கவேண்டும் என கூறி அந்த இளைஞரை சராமரியாக தாக்கியுள்ளனர்.அத்துடன் நிற்காமல் அவருடைய கழுத்தில் காலணி மாலையை அணிவித்தனர். பின்னர் அவரை ஒரு லாரியின் முன்புறம் கயிற்றால் கட்டி ஓட்டிச்சென்றனர். 3 கி.மீ. தூரத்துக்கு ஊர்வலமாக அழைத்துச்சென்ற அவர்கள், பின்னர் அவிழ்த்து விட்டனர்.

சரமாரியாக தாக்கியதிலும், லாரி முன்னர் கட்டி 3கிலோமீட்டர் தூரம் வரை சென்றதாலும் அந்த அதிர்ச்சியில் கீழே விழுந்த அவரால் எழ முடியவில்லை. இந்த சம்பவத்தை அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சற்றுநேரத்தில் மிக வைரலாக பரவியது. இதனைக்கண்ட நெட்டிசன்கள். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவலர்கள் டேக் செய்து வலியுறுத்தினர்.

கோரிக்கையை ஏற்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த டிரைவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அறிந்த மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள், தானாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அவர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். செல்போன் திருடியதாக கூறி வாலிபரை லாரியின் முன்புறம் கட்டி ஓட்டிச்சென்ற இந்த கொடூர சம்பவம் ஒடிசா மட்டுமின்றி நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்