Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குரங்கம்மை பாதிப்பு 5 ஆக உயர்வு.....மக்களே உஷாரா இருங்க...!

madhankumar July 25, 2022 & 11:29 [IST]
குரங்கம்மை பாதிப்பு 5 ஆக உயர்வு.....மக்களே உஷாரா இருங்க...!Representative Image.

ஆப்ரிக்காவில் முதன்முறையாக பரவத்தொடங்கிய குரங்கம்மை தற்போது நாடு முழுவதும் பரவி வருகிறது. பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் இந்த குரங்கம்மை தலைநகர் டெல்லியில் ஒருவருக்கு ஏற்பட்டிருந்த நிலையில் தெலங்கானாவில் ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதுவரையில் 75 நாடுகளில் 16000 இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை இந்த நோய் முதலில்  ஜூன் 14ம் தேதி கேரளாவில் கண்டறியப்பட்டது. இந்நிலையில் தெலங்கானாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று ஏற்பட்டுள்ளது. குவைத்தில் இருந்து தாயகம் திரும்பிய 40 வயது நபர் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தொடர் கண்காணிப்பில் இருந்துவருகின்றன. இதன்மூலம், இந்தியாவில் இந்த நோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்திருப்பது பொதுமக்களிடையே  பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்