Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு; ஆயிரக்கணக்கில் போலீசார் குவிப்பு! 

kanimozhi Updated:
தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு; ஆயிரக்கணக்கில் போலீசார் குவிப்பு! Representative Image.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளனர் இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாநகரில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது காவல்துறையினர் நடத்ததிய துப்பாக்கிச்சூடு காரணமாக 13 பேர் உயிரிழந்தனர் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய அதிமுக  அரசு சார்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. 

இதுசம்பந்தமான  விசாரணை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளனர்.


இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், விவிடி சிக்னல், குரூஸ் பர்னாந்து சிலை, மாதா கோவில், திரேஸ்புரம், புது தெரு, பாத்திமா நகர் உள்ளிட்ட  மீனவ பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

.தூத்துக்குடி, விருதுநகர், தேனி, தென்காசி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்