Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரேஷன் அரிசியில் எலி குஞ்சுகள்.. பொதுமக்கள் அதிர்ச்சி!!

Sekar Updated:
ரேஷன் அரிசியில் எலி குஞ்சுகள்.. பொதுமக்கள் அதிர்ச்சி!!Representative Image.

தேனி மாவட்டத்தில் ரேஷன் அரிசியில் எலி குஞ்சுகள் இறந்து கிடந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா திருமலாபுரம் ஊராட்சியில் உள்ள பால சமுத்திரம் ரேஷன் கடையில், பொதுமக்களில் சிலருக்கு விநியோகிக்கப்பட்ட அரிசியில் எலி குஞ்சுகள் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து ரேஷன் அரிசியை கடை முன்பாக தரையில் கொட்டி கடை பணியாளரிடம் பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதோடு, அரிசியை அங்கேயே விட்டுச் சென்றனர்.

இந்நிலையில், சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்