Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிம்லாவில் நடைபெற இருந்த எதிர்கட்சிகள் கூட்டம் மாற்றம்

Baskarans Updated:
சிம்லாவில் நடைபெற இருந்த எதிர்கட்சிகள் கூட்டம் மாற்றம்Representative Image.

மும்பை: சிம்லாவில் நடைபெறவிருந்த எதிர்கட்சிகளின் கூட்டம் பெங்களூருவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் 16கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துக் கொண்டனர். இதில் மல்லிகார்ஜூனே கார்கே, ராகுல் காந்தி மற்றும் திமுக தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலின், எம்பி டி.ஆர் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜக வெற்றிப் பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் உள்ளதால், பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்த கூட்டத்தில் பங்கேற்றன. பிற்பகல் 12மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் மாலை 4மணி வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜகவை வீழ்த்த பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. மேலும் அடுத்த கூட்டம் சிம்லாவில், காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெறவிருந்த எதிர்கட்சிகள் கூட்டம் மாற்றப்பட்டு, அதற்கு பதிலாக பெங்களூருவில் ஜூலை 13 மற்றம் 14ஆம் தேதிகளில் நடைபெறும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தினால், பிரதமர் மோடி அமைதியற்று காணப்படுகிறார். எதிர்க்கட்சி தலைவர்களின் அடுத்த கூட்டம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வரும் ஜூலை 13 மற்றும் 14 ல் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கூட்டம் மாற்றப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்