Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விதிமீறல்.. 3 ஆண்டுகளில் 1,811 என்ஜிஓக்களுக்குத் தடை.. தமிழகம் நெ.1 இடத்தில்!!

Sekar July 30, 2022 & 10:02 [IST]
விதிமீறல்.. 3 ஆண்டுகளில் 1,811 என்ஜிஓக்களுக்குத் தடை.. தமிழகம் நெ.1 இடத்தில்!!Representative Image.

கடந்த 3 ஆண்டுகளில் சட்ட விதிகளை மீறியதற்காக 1,800 அரசு சாரா என்ஜிஓக்களின் எஃப்சிஆர்ஏ உரிமங்கள் அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

மேலும் 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் 783 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் எஃப்சிஆர்ஏ உரிமம் புதுப்பித்தல் விண்ணப்பங்களும் அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டன என்று அவர் மக்களவையில் தெரிவித்தார்.

முந்தைய மூன்று ஆண்டுகளில் (2019, 2020, 2021) வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம், 2010 (FCRA 2010) விதிகளின் கீழ் 1,811 எண்ணிக்கையிலான சங்கங்களின் பதிவுச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என ஒரு கேள்விக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்தார்.

அரச சார்பற்ற நிறுவனங்களின் பதிவை ரத்து செய்வது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படுவதற்கு முன்னர், அதற்கான ஷோ காஸ் நோட்டீஸ் அறிவிப்பை வழங்குவதன் மூலம் நியாயமான முறையில் அவர்களின் கருத்துக்களையும் கேட்கப்படுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.

எஃப்சிஆர்ஏ உரிமங்கள் ரத்து செய்யப்பட்ட என்ஜிஓக்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் தமிழகமே உள்ளது. தமிழகத்தில் மிக அதிகபட்சமாக 218, மகாராஷ்டிராவில் 206 மற்றும் மேற்குவங்கத்தில் 193 என்ஜிஓக்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்