Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

India Latest News : ரயிலில் வித் அவுட்.. 1.57 லட்சம் அபராதம்..?

Muthu Kumar June 17, 2022 & 16:50 [IST]
India Latest News : ரயிலில் வித் அவுட்.. 1.57 லட்சம் அபராதம்..?Representative Image.

India Latest News : பீகாரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்களிடம் இருந்து 1.57 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில்களில் பயணசீட்டு எடுக்காமல் பயணிப்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் பயணசீட்டு சோதனைகள் மற்றும் அபராதங்களை கடுமையாக்கி வருகிறது. அதன்படி பீகாரிலிரிந்து சென்னை வழியாக எர்ணாகுளம் வரை செல்லும் ரப்தி சாகர் விரைவு ரயில் நேற்று இரவு சென்னை வந்தடைந்தது.

இந்நிலையில், அங்கு டிக்கெட் பரிசோதகர்கள் நடத்திய சோதனையில் பலரிடம் டிக்கெட் இல்லாதது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, டிக்கெட் எடுக்காமல் சென்ற பயணிகளிடம் இருந்து ரூ.51,540 அபராதமாக வசூல் செய்தனர். 

இதனையடுத்து, அதே ரயில் புறப்பட்டு காட்பாடி செல்வதற்குள் டிக்கெட் எடுக்காமல் சென்ற 199 பேரை பிடித்தனர். மேலும், அவர்களிடம் 1,05,500 ருபாய் அபராதமாக வசூலித்தனர்.

அதன்படி, இந்த ஒரு ரயிலில் ஒரே நாளில் டிக்கெட் எடுக்காமல் சென்றவர்களிடம் இருந்து 1.57 லட்சம் ருபாய் அபராதமாக வசூலாகியுள்ளது. இச்சம்பவம் பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்