Fri ,Apr 26, 2024

சென்செக்ஸ் 73,811.76
-527.68sensex(-0.71%)
நிஃப்டி22,438.30
-132.05sensex(-0.59%)
USD
81.57
Exclusive

உலகின் சக்திவாந்த பாஸ்போர்ட்.. கடைசியிலிருந்து 4வது இடத்தில் பாகிஸ்தான்.. இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா?

Sekar Updated:
உலகின் சக்திவாந்த பாஸ்போர்ட்.. கடைசியிலிருந்து 4வது இடத்தில் பாகிஸ்தான்.. இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா?Representative Image.

2023 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் குறைந்த சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்திய ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின்படி, ஆப்பிரிக்க நாடான சோமாலியாவுக்குக் கீழே பாஸ்போர்ட் தரவரிசையில் பாகிஸ்தான் உலகின் நான்காவது மோசமான நாடாக பட்டியலிடப்பட்டுள்ளது.

சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகள் பாக்கிஸ்தானுக்கு கீழே உள்ள மூன்று நாடுகள் என லண்டனை தளமாகக் கொண்ட குடியேற்ற ஆலோசனைக் குழு வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவரிசையில் சிறந்த நாடுகள்

ஜப்பானிய குடிமக்கள் இப்போது உலகெங்கிலும் உள்ள 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். அதே நேரத்தில் இரண்டாவது இடத்தில் உள்ள தென் கொரியர்கள் மற்றும் சிங்கப்பூரர்கள் 192 நாடுகளுக்கு விசா இல்லாத/விசா-ஆன்-அரைவல் விசா மூலம் பயணிக்கலாம்.

ஜெர்மனியும் ஸ்பெயினும் கூட்டாக மூன்றாவது இடத்தில் உள்ளன. உலகளவில் 190 இடங்களுக்கு விசா இல்லாத அணுகல் இந்த நாட்டினருக்கு உள்ளது. பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகியவை முறையே 187 மற்றும் 186 மதிப்பெண்களுடன் ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களில் உள்ளன. 

இந்தியா எந்த இடத்தில் உள்ளது

குறியீட்டின் படி, 59 நாடுகளுக்கு இலவச விசா அணுகல் கொண்டு சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியலில் இந்திய பாஸ்போர்ட் 85 வது இடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட் உள்ளவர்கள் பூட்டான், இலங்கை, தாய்லாந்து, கென்யா, மொரிஷியஸ், மாலத்தீவுகள், கம்போடியா, நேபாளம், ஜிம்பாப்வே, கத்தார் போன்ற 59 நாடுகளுக்கு விசா இன்றியோ அல்லது ஆன் அரைவல் விசா மூலமோ செல்லலாம்.

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் மொத்த எண்ணிக்கை விரைவில் 10 கோடியைத் தாண்டும் என்று மூத்த அதிகாரி ஒருவர் சமீபத்தில் கூறினார். 2023 ஆம் ஆண்டுக்குள் இ-பாஸ்போர்ட் வழங்குவது முழுமையாக செயல்படும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்