Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரதமர் மோடி தமிழகம் வருகை...பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

madhankumar May 25, 2022 & 19:30 [IST]
பிரதமர் மோடி தமிழகம் வருகை...பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!Representative Image.

பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார். பிரதமரின் வருகையையொட்டி, பாதுகாப்பு பணியில் 22,000 போலீஸார் ஈடுபட உள்ளதாகவும், 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னைப் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி நாளை (மே 26, 2022) மாலை சென்னை வருகிறார். பின்னர் ஜவஹர்லால் நேரு உல் விளையாட்டரங்கில் பல்வேறு நலத்திட்டங்களுக்காக அடிக்கல் நாட்டவுள்ளார். இந்நிகழ்ச்சி முடிந்ததும், சென்னை விமான நிலையத்திற்கு சென்று விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

பிராமரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவல் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் பாதுகாப்புகள் குறித்த ஆலோசனைகள் வழங்கினார். 

சென்னை பெருநகர காவல் ஆணையர் தலைமையில், 5 கூடுதல் ஆணையாளர்கள், 8 காவல் இணை ஆணையாளர்கள் மற்றும் காவல்துறை துணை தலைவர்கள் (JCs and DIGs), 29 காவல் துணை ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் (DCs and SPs), சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவு காவல் ஆளிநர்கள், ஆயுதப்படை, கமாண்டோ, தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவல் ஆளிநர்கள் உள்பட 22,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பிரதமர் வருகைதரும் சென்னை விமான நிலையம், நேரு உல் விளையாட்டரங்கம் அதனை சுற்றியுள்ள பகுதிகள் சென்னையில் உள்ள லாட்ஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் சோதனைகள் மேற்கொண்டு சந்தேக நபர்கள் மற்றும் அந்நிய நபர்கள் உள்ளனரா என கண்காணித்து வருகின்றனர். மேலும் முக்கிய ரயில்நிலையங்கள், பேரூந்துநிலையங்கள் ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டுவருகின்றனர் என கூறப்பட்டுள்ளது.

ட்ரோன்கள் பறக்க நாளை தடை:

பாரத பிரதமரின் சென்னை வருகையையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், கு.வி.மு.ச. பிரிவு 144-ன் கீழ், சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை (மே 26) வரை, டிரோன்கள் (Drones) மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Other Unmanned Aerial Vehicles) பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்