Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்? அமைச்சர் விளக்கம்..!

madhankumar May 25, 2022 & 14:40 [IST]
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்? அமைச்சர் விளக்கம்..!Representative Image.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த கணித தேர்விற்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்படுவது பரிசீலனையில் உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் வழங்கப்படும் 23வகை  சான்றிதழ்களை இணையதளம் வழியாக வழங்கும் திட்டம் மற்றும் வரும் கல்வியாண்டிற்கான நாட்காட்டி, ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட காலாண்டு நாட்காட்டி உள்ளிட்டவற்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டு தொடங்கி வைத்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்.

ஜூன் 13ஆம் தேதி ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி வகுப்புகள் துவங்கப்படும், மேலும் ஜூன் 20ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், ஜூன் 27ஆம் தேதி பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.மேலும் அடுத்த கல்வியாண்டுக்கான தேர்வுகள் எப்போது என இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.மேலும் வருகின்ற கல்வியாண்டில் சனிக்கிழமைகளிலும் வகுப்புகளை நடத்த வேண்டிய தேவை இல்லை என தெரிவித்த அமைச்சர் மாணவர்களுக்கு உரிய மனநல ஆலோசனைகள்  பள்ளி துவங்கிய பின் வழங்கப்படுமென தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணித பாடத்தில் பாடத்திட்டத்தை தாண்டிய கேள்விகள் கேட்கப்படுவதால் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

ஜூன் 13-ல் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அமலுக்கு வராது என்றும், பள்ளிகளில் 8.30 மணிக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என தெரிவித்த அவர் தற்போது வழங்கப்படாது அதுகுறித்து ஆலோசனை முடிந்த பிறகு தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். CBSC பள்ளிகளுக்கும் ஜூன் மாதத்தில் தான் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது என கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்