Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரபலங்களின் வாழ்த்து மழையில் இளையராஜா....!

madhankumar July 07, 2022 & 09:41 [IST]
பிரபலங்களின் வாழ்த்து மழையில் இளையராஜா....!Representative Image.

ராஜ்யசபாவில் நியமன எம்.பி.ஆக நியமிக்கப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தலைவர்களும், பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 12 பேர் நியமன உறுப்பினர்களாக குடியரசு தலைவரால் நியமிக்கப்படுவர். அதில் பல சாதனைகளை புரிந்த நபர்களுக்கு அந்த பதவி வழங்கப்படும். அந்தவகையில் பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை வென்ற இசையமைப்பாளர் இளையராஜாவை மாநிலங்களவை நியமன எம்.பி.ஆக குடியரசு தலைவர் நியமித்துள்ளார். இதற்கு பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி:

இளையராஜா ராஜ்யசபா எம்.பி.ஆக நியமிக்கப்பட்டதற்கு இந்திய பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் படைப்பு மேதையான இளையராஜா தலைமுறை தலைமுறையாக மக்களை தனது இசையால் கவர்ந்து வருகிறார். அவரது படைப்புகள் பல உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கின்றன. அவர் ஒரு தாழ்மையான பின்னணியில் இருந்து உயர்ந்து இவ்வளவு சந்தித்துள்ளது அவரது வாழ்க்கைப் பயணம் சமமாக செல்ல ஊக்கமளிக்கிறது. அவர் ராஜ்யசபாவுக்கு நியமனம் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்:

இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட 'இசைஞானி இளையராஜா' அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராய்ச் சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள் என ட்விட்டரில் பதிவிட்டு உள்ளர்.

நடிகர் ரஜினிகாந்த்:

மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள எனது நண்பர் இசைஞானி இளையராஜாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

நடிகர் கமல் ஹாசன்:

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜா அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்கவேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம் என பதிவிட்டுள்ளார்.

நடிகை குஷ்பு:

நமது சொந்த மேஸ்ட்ரோ இளையராஜா நமது பிரதமரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். நரேந்திர மோடி ஜி அவர்கள், கடின உழைப்பு மற்றும் திறமைக்கான பாராட்டுக்கு தகுதியானவர்களை எப்போதும் பாராட்டத்தவறியது இல்லை. அன்புள்ள பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். தமிழ் மீதான உங்களின் அன்பை உலகம் பார்க்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ:

ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்த சாதனையாளர். தன் கடின உழைப்பால் கலையுலகில் உச்சம்தொட்டவர். முத்தமிழறிஞர் கலைஞரால் இசைஞானி என்று போற்றப்பட்டவர். மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் ஐயா இளையராஜா அவர்களுக்கு என் அன்பையும் வாழ்த்துகளையும் தெரிவித்து மகிழ்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இது போன்று மலையாள நடிகர் மோகன் லால், அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன், இயக்குனர் சுசி கணேசன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இளையராஜா என்மீது அன்பு கொண்ட ஏராளமான அபிமானிகள் இந்திய அரசு எனக்களித்த கௌரவமான அங்கீகாரத்திற்காகப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த வண்ணமிருக்கின்றனர் . உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாதாகையால் எல்லோருக்கும் என் உளங்கனிந்த நன்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்