Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

துண்டு துண்டாக வெட்டப்பட்ட பொன் நாவரசு.. இந்தியாவை உலுக்கிய கொடூர சம்பவமும் பின்னணியும்..

Nandhinipriya Ganeshan September 19, 2022 & 18:40 [IST]
துண்டு துண்டாக வெட்டப்பட்ட பொன் நாவரசு.. இந்தியாவை உலுக்கிய கொடூர சம்பவமும் பின்னணியும்..Representative Image.

1996 ஆம் ஆண்டில் தமிழகத்தையே உலுக்கிய ஏன் இந்தியாவையே உலுக்கிய ஒரு கொடூர சம்பவம் தான் இது. இந்த சம்பவத்திற்கு பிறகு தான் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில் மட்டும் ஒரு புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டது. என்ன நடந்தது, அந்த கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை தற்போது பார்க்கலாம். 1996 ஆம் ஆண்டு சென்னை பல்கலைகழக முன்னாள் துணை வேந்தராக இருந்த பொன்னுசாமியின் மகன் தான் பொன் நாவரசு. 17 வயதான அவரை 1996 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் சிதம்பதரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைகழக ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பிற்காக சேர்ந்தார். கல்லூரி ஹாஸ்ட்டலில் தங்கி படித்து வந்த நாவரசு அதே ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி அவரது அப்பாவிற்கு  ஃபோன் செய்துள்ளார். 

அப்போது 'இன்னைக்கு தான் எனக்கு கடைசி பரீட்சை என்றும், தீபாவளி கொண்டாட நாளைக்கு வீட்டிற்கு வந்துவிடுவேன்' என்று தனது அப்பாவிடம் சந்தோஷமாக சொல்லியிருக்கிறார். இந்த நிலையில், தனது மகன் காத்துக்கொண்டிருந்த பொன்னுசாமிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 7 ந் தேதி மகன் வரவில்லை என்றதும் சரி ஒரு நாள் கழித்து வருவான் என அமைதியாக இருந்துள்ளார் பொன்னுசாமி. ஆனால், 8 தேதி வரை நாவரசு வராததால் அவர் தங்கி படிக்கும் ஹாஸ்ட்டலுக்கு ஃபோன் செய்து விசாரித்த போது, அவர் தங்கியிருக்கும் ரூமின் கதவு வெளிப்புறமாக பூட்டியிருப்பதாகவும், அவர் தீபாவளிக்கு வீட்டிற்கு சென்றிருப்பார் எனவும் கூறியிருக்கிறார்கள்.

Inside Anna Nagar's K4 police station that's #5 in the country! - Citizen  Matters, Chennai

வீட்டிற்கும் வரவில்லை, ஹாஸ்டலிலும் இல்லை என்றால் வரும் வழியில் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்குமோ என பயந்த பொன்னுசாமி, பயத்திலேயே மகனுக்காக காத்துக்கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் நவம்பர் 7 ந் தேதி சென்னை மந்தவேளி போலீஸ் ஸ்டேசனுக்கு ஒரு ஃபோன் கால் வந்திருக்கிறது. அந்த ஃபோன்காலில் 'மந்தவேளி பஸ் ஸ்டாண்டில் இருக்க கூடிய 21ஜி பஸ்ஸில் கேட்பாறற்று ஒரு சூட்கேஸ் கிடப்பதாகவும், அதில் இருந்து அதிகம் துர்நாற்றம் வீசுவதாகவும்' சொல்லியிருக்கிறார்கள்.

உடனே அந்த பஸ்ஸை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவளைத்து, அந்த சூட்கேஸை பிரித்து பார்த்திருக்கிறார்கள். அந்த சூட்கேஸில் தலை, கை, கால் வெட்டி எடுக்கப்பட்ட ஆண் உடல் மட்டும் கிடந்துள்ளது. இது குறித்து சென்னை மாநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், நவம்பர் 10 ஆம் தேதி நாவரசுவின் தந்தை பொன்னுசாமி, அண்ணாமலை நகர் போலீஸாரிடம் புகார் கொடுத்ததால் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். காணாமல்போன நாவரசுவிற்கும் இந்த சூட்கேஸில் இருக்கும் உடலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா? என்று போலீசார் தீவிர விசாரணை செய்தனர். 

Odisha SD & TE Dept issues anti-ragging guideline - KalingaTV

அப்போது பல திடிக்கிடும் உறைய வைக்கும் தகவல்கள் கிடைத்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். நாவரசுவை காணாமல் போனதையடுத்து, பொன்னுசாமி நேரடியாக அவர் படித்த கல்லூரிக்கு நேரடியாக சென்று நடந்ததை கூற, உடனே கல்லூரி தரப்பில் இருந்து நாவரசு தங்கியிருந்த ரூமிற்கு சென்றுள்ளனர். அப்போது, வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்த கதவை திறந்து உள்ளே போய் பார்த்தப்பின்பு தான் தெரியவருகிறது, நாவரசு ஊருக்கு கிளம்பவில்லை என்று. ஏனென்றால், அவருடைய அனைத்து ஆடை, பேக் எல்லாம் அந்த ரூமிலேயே தான் இருந்துள்ளது. இதை பார்த்த உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்து, தேடுதல் பணியை துவங்கியபோது விசாரணையில் அடிக்கடி ஜான் டேவிட் என்ற பெயர் குறுக்கே வந்துள்ளது. ஜான் டேவிட் யாரென்றால் அதே கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் சீனியர் ஸ்டூடண்ட் தான். 

UGC releases new Directives to curb ragging in college and hostel, circular  issued by UGC | India.com

மேலும், விசாரணையில் நவம்பர் 6 ஆம் தேதி மதியம் நாவரசுவை ஜான் டேவிட் தனது அழைத்து சென்றுள்ளது தெரிய வந்தது. நவம்பர் 11 ஆம் தேதி ஜான் டேவிட் ராஜு மன்னார்குடியில் தன் கல்லூரியின் ஜூனியர் ஸ்டூடண்டை கொலை செய்துவிட்டதாக சொல்லி சரண் அடைகிறார். பின்னர், அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இரவு முழுக்க வாயை திறக்காத ஜான் டேவிட் நள்ளிரவு 2 மணிக்கு கொஞ்சம் கொஞ்சமாக உண்மையை சொல்ல ஆரம்பித்துள்ளார். கல்லூரியில் அடிக்கடி ராகிங் செய்வதை வழக்காம வைத்திருந்த ஜான் டேவிட்டை அலட்சியப்படுத்தி வந்துள்ளார் நாவரசு. இதை வைத்து ஜான்டேவிட்டை மற்ற நண்பர்கள் கிண்டல் செய்துவந்துள்ளனர். இதை மனதில் வைத்து கொண்டு பழிவாங்க காத்திருந்த ஜான் டேவிட்டிற்கு ஒரு சந்தர்பம் கிடைக்க, நாவரசுவை தன்னுடைய ரூம்மிற்கு அழைத்து சென்று நிர்வானமாக்கி ராகிங் செய்துள்ளார். 

நாவரசு கொலை வழக்கு: ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய மனு  தள்ளுபடி | Navarasu murder case: Petition seeking early release of John  David dismissed - hindutamil.in

தன்னுடைய ஸூ வை நக்கி துடைக்க வேண்டும் என்று ஜான் டேவிட் கூற, ஆனால் நாவரசு அதை மறுத்ததால் ஆத்திரத்தில் அருகில் கம்பியை எடுத்து அவரை தாக்கியுள்ளார். இதனால், மயக்கமடைந்த நாவரசுவை தனது கல்லூரி ஆய்வகத்தில் அறுவை சிகிச்சை செய்யப்படுத்தப்படும் கருவியை கொண்டு கை, தலை, கால்களை தனித்தனியாக வெட்டியெடுத்துள்ளார். தலையை ஒரு குட்டையிலும், உடலை சூட்கேஸில் போட்டு பஸ்ஸிலும், கை மற்றும் கால்களை பேக் செய்து சென்னை செல்லும் இரயிலில் வீசியிருக்கிறார். பின்னர், சிதம்பரம் திரும்பி வந்தாகவும், பயத்தில் போலீஸில் சரணடைந்ததாகவும் கூறியிருக்கிறார். 

Ragging continues unabated despite stringent laws in TN || Ragging  continues unabated despite stringent laws in TN

பின்னர், இந்த கொடூர வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது. கல்லூரியில் ராகிங் கொடுமையால் மாணவர் நாவரசு கொடூமாக கொல்லப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் பீதியை ஏற்படுத்தியதையடுத்து, இந்த வழக்கில் சிறப்பு கவனம் செலுத்தியது. பின்னர் வழக்கை விசாரித்த சிங்காரவேலு 1998 மார்ச் 11 ஆம் தேதி இந்த ராகிங் வழக்கிற்கு தீர்ப்பு வழங்கினார். மாணவனை கொடூரமாக கொன்றதற்காக ஜான் டேவிட்டிற்கு இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்து தீர்ப்பு வழங்கினார். பின்னர், ஜான் டேவிட் மேல் முறையீடு செய்ய, 2001 ஆம் ஆண்டு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்படாததால் ஜான் டேவிட் விடுதலை செய்து உத்தரவிடப்பட்டது. 

கிட்டத்தட்ட பத்துவருடங்கள் கழித்து 2011 ஆம் ஆண்டு மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது டேவிட்டிற்கு கொடுத்த இரட்டை ஆயுள் தண்டனை சரியானது தான் என்று தீர்ப்பாகியது. இந்த கொடூர சம்பவத்திற்கு பிறகு தான் தமிழகத்தில் முதன் முதலாக ராகிங் செய்வதும், ராகிங் செயலில் ஈடுபடுவதும் குற்றம் என்ற சட்டம் (Anti - ragging Act) கொண்டுவரப்பட்டது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்