Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டிராக்டர் ஏற்றி கர்ப்பிணி பெண் கொடூரக் கொலை…! நிதி நிறுவனர்கள் செய்த அட்டூழியம்…!

Gowthami Subramani [IST]
டிராக்டர் ஏற்றி கர்ப்பிணி பெண் கொடூரக் கொலை…! நிதி நிறுவனர்கள் செய்த அட்டூழியம்…!Representative Image.

கடன் கேட்க சென்ற இடத்தில் தனியார் நிதி நிறுவனம் டிராக்டர் ஏற்றி கர்ப்பிணி பெண்ணைக் கொலை செய்ததாகக் கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹசரிபாத் மாவட்டத்தில் பரியநாத் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின் பெயர் மிதிலேஷ் மேதா. இவர் ஒரு மாற்றுத் திறனாளி ஆவார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் 3 லட்சம் ரூபாய் கடன்பெற்று டிராக்டர் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த கடன் தொகை செலுத்தப்பட்ட வந்த நிலையில் இன்னும் 1.30 லட்சம் தர வேண்டியிருந்தது.

இந்த தொகையைக் கேட்டு, நிதி நிறுவன ஊழியர்கள் தொடர்ந்து, மிதிலேஷ்க்கு தொல்லை கொடுத்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், மீதத்தொகையை விரைவாகச் செலுத்தும் படியும், இல்லையெனில் டிராக்டரை திரும்பி எடுத்துக் கொள்வோம் எனவும் நிதி நிறுவனம் கடந்த செப்டம்பர் 15 ஆம் நாள் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த அவர், தனது 27 வயது மகளுடன் தனது கிராமத்தில் பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி வைக்கப்பட்ட டிராக்டரைப் பார்க்க சென்றுள்ளார். மிதிலேஷின் மகள் 3 மாதம் கர்ப்பிணி பெண் ஆவார்.

அங்கு சென்ற பிறகு, அங்கு ஏற்கனவே வந்திருந்த நிதி நிறுவன ஊழியர்கள் டிராக்டரை எடுத்துச் செல்ல முற்பட்டனர். இதனைத் தடுப்பதற்காக, மிதிலேஷின் மகள் முயற்சித்துள்ளார்.

ஆனால், நிதி நிறுவன ஊழியர்கள் டிராக்டரை வேகமாக இயக்கி தடுக்கச் சென்ற கர்ப்பிணி பெண் மீது ஏற்றியுள்ளனர். இதில், டிராக்டரின் சிக்கிய கர்ப்பிணியான மிதிலேஷின் மகள், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

பின், டிராக்டர் ஏற்றி கொலை செய்த நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று விட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கர்ப்பிணி பெண்ணை டிராக்டர் ஏற்றி கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற அந்த ஊழியர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கொடுத்த கடனைத் திரும்ப பெறுவதற்கு, ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிதி நிறுவன ஊழியர்கள் செய்த இந்த காரியம் அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்