Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியர்:- போக்சோ சட்டத்தில் கைது..!

Bala June 23, 2022 & 11:58 [IST]
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியர்:- போக்சோ சட்டத்தில் கைது..!Representative Image.

சென்னையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சர்ச் பாதிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த 31 வயது மதிப்புக்க ஒருவர் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தனது 13 வயது மகளுக்கு சர்ச் பாதிரியர் ஒருவர் கடந்த 3 வருடங்களாக பாலியல் தொல்லை அளித்து வருவதாக தெரிவித்துள்ளார். புகாரையடுத்து சிறுமியின் கைபேசியை வாங்கி சோதனை செய்த காவல்துறையினர் அதில்  ஆபாச வீடியோக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் வந்ததை உறுதிப்படுத்தினர். பின்னர் இதனை அனுப்பி வைத்த பெரம்பூர் பரமசிவம் தெரு பகுதியைச் சேர்ந்த சேகர் கிருபாகரன் (வயது 38) என்ற நபரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

வில்லிவாக்கம் பெரியார் நகர் பகுதியில் உள்ள தேவாலயத்தில் பெண்ணின் கணவர்,  வேலை செய்து கொண்டிருந்த போது, அதே தேவாலயத்தில் பாதிரியராக கிருபாகரன் என்பவர் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால், கணவரின் மனைவியும், 13 வயது மகளும், உதவி செய்து வந்துள்ளனர். அப்போது பாதிரியருக்கு சிறுமி மீது ஆசை ஏற்ப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிரியர் கும்மிடிபூண்டி தேவாலயத்திற்கு மாற்றப்பட்டதால், சிறுமியை எப்படியாவது பார்த்தாக வேண்டும் என்று, சிறுமியின் கணவருக்கு போன் செய்து, தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும், உதவிக்கு உங்களது மனைவி மற்றும் சிறுமியை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதனை நம்பி அங்கு சென்ற போது, சிறுமிக்கு பாதிரியர் 3 முறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இதனை வெளியே கூறினால், தந்தையை வேலையை விட்டு தூக்கி விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனையடுத்து அவர்கள் சொந்த வீட்டுக்கு சென்ற போது சிறுமியின் கைபேசிக்கு பாதிரியர் ஆபாச வீடியோ மற்றும் செய்திகளை அனுப்பியதை கண்டு அவரது தாய் அதிர்சியடைந்துள்ளார். இதனைக்கொண்டு பாதிரியர் மீது புகார் அளித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்