Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டி?... எந்த தொகுதியில் தெரியுமா?

KANIMOZHI Updated:
தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டி?... எந்த தொகுதியில் தெரியுமா?Representative Image.

தமிழகத்தில் வர உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பாஜக, 2024ம் ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலைத் தான் குறிவைத்துள்ளது. நடக்க உள்ள எம்.பி. தேர்தலில் அதிக சீட்டுகளை வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ள அண்ணாமலை, தனித்து போட்டியிட்டால் பாஜகவிற்கு கூடுதல் பலமாக அமையும் என தலைமையிடம் அண்ணாமலை கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. 

சமீபத்தில் நடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் கூட 27 ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகும் 156 தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக வரலாற்று சாதனை படைத்தது.  2022ம் ஆண்டு நடந்த இந்த மாற்றங்கள், 2023 மற்றும் 2024ம் ஆண்டு பல ஆச்சர்யங்களுக்கு வழி வகுக்கும் என்பது தெரிகிறது. 

வடமாநிலங்களில் கோலோச்சும் பாஜகாவால் தென்னிந்தியாவில் காலூன்ற முடியவில்லை என்பதை உடைக்க இந்த முறை மோடியே நேரடியாக களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மோடி நினைத்தால் எதுவும் முடியும், அவர் தான் எங்களுடைய நம்பிக்கை நட்சத்திரம் என்பது பாஜகவின் உறுதியான கோட்பாடு. குஜராத் தேர்தல் வெற்றிக்கு கூட பிரதமர் மோடி தான் மிக முக்கியமான காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. 

குறிப்பாக பிரதமர் மோடி தமிழகத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டால் பாஜகவின் வாக்கு வங்கி கிடுகிடுவென உயரும் என்பதை அண்ணாமலை உறுதியாக நம்புகிறார். இதனிடையே சமீபத்தில் காசி தமிழ் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மோடி, வட இந்தியாவிற்கு காசி போல், தென்னிந்தியாவிற்கு ராமேஸ்வரம் திகழ்வதாக புகழ்ந்துரைத்தார். 

இதன் மூலம் மோடி ராமநாதபுரத்தில் நேரடியாக களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 
ராமர் சேது பாலம், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் காலம் ஆகியோரை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்ய ராமநாதபுரம் சரியான இடம் என்பதால், பாஜக அதனை கையில் எடுக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி தமிழகத்தில் பாஜகவின் நடவடிக்கைகளை உற்றுநோக்கினால், தனுஷ் கோடி - ராமேஸ்வரம் இடையே சாலை அமைத்தது, மண்டபம் - பாம்பன் இடையே புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ரயில் பாலம் அமைக்கும் பணியை முடுக்கிவிட்டது ஆகியவற்றை எல்லாம் பார்க்கும் போது, பிரதமர் மோடி தமிழகத்தின் பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ளதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் பாஜக வட்டாரங்களைப் பொறுத்தவரை பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட வாய்ப்பில்லை என்றும் தனது சொந்த மாநிலமான குஜராத்தில் தான் களமிறங்குவார் என்றும் அடித்துக்கூறுகின்றனர். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்