Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரயில்வேக்கு ரூ.259.44 கோடி இழப்பு.. அக்னிபாத் போராட்டத்தால்!!

Sekar July 22, 2022 & 18:00 [IST]
ரயில்வேக்கு ரூ.259.44 கோடி இழப்பு.. அக்னிபாத் போராட்டத்தால்!!Representative Image.

அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் இந்திய ரயில்வேக்கு ரூ.259.44 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இன்று ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

சமீபத்தில் தொடங்கப்பட்ட அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் மக்கள் நடத்திய போராட்டங்களுக்கு மத்தியில், பீகாரில் இருந்து தெலுங்கானா வரை பல இடங்களில் இரயில்வே சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. 

இதில் பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு மத்திய ரயில்வே மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அக்னிபத் போராட்டத்தால் நாடு முழுவதும் 2000க்கும் மேற்பட்ட ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ஜூன் 15 முதல் ஜூன் 23 வரை 2132 ரயில்கள் இதனால் ரத்து செய்யப்பட்டன.

எனினும் ஆயுதப் படைகளில் ஆட்சேர்ப்புக்கான அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவாக, பொதுமக்களின் குழப்பம் காரணமாக ரயில் சேவைகள் சீர்குலைந்ததால் பயணிகளுக்கு வழங்கப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான தனி தரவு பராமரிக்கப்படவில்லை என்றும் வைஷ்ணவ் கூறினார்.

அதே சமயம் அக்னிபாத் திட்டத்தின் காரணமாக ரத்து செய்யப்பட்ட அனைத்து பாதிக்கப்பட்ட ரயில் சேவைகளும் மீட்டெடுக்கப்பட்டுள்ளன என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்