Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அடுத்த 3 மணி நேரத்தில்… தமிழக மக்களே உஷார்...!

Muthu Kumar July 22, 2022 & 11:45 [IST]
அடுத்த 3 மணி நேரத்தில்… தமிழக மக்களே உஷார்...!Representative Image.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர்,  நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்