தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் ஆலயங்களில் நாளை ஆடிப்பூரம் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 1972 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூரம் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 2 ஆண்டுகளாக எளிமையாக நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு 51வது ஆடிப்பூரம் விழா நாளை நடைபெற உள்ளது.
இதனையடுத்து, மேல்மருவத்தூர் கோவிலில் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூரம் திருவிழா நாளை ஆகஸ்ட் 1-ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளுா் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் ஆகஸ்ட் 13ம் தேதி சனிக்கிழமை பணி நாள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…