Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம்; இளைஞருக்கு 10 ஆண்டு சிறை! 

Kanimozhi Updated:
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம்; இளைஞருக்கு 10 ஆண்டு சிறை! Representative Image.

மானாமதுரையில் கடந்த 2014 ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ 50 ஆயிரம் அபராதமும் விதித்து சிவகங்கை மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார் 

மானாமதுரை ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துமாரி. இவர் செங்கல் சூளை தொழிலாளர் ஆவார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அதே மானாமதுரை பகுதியில் செயல்படும் செங்கல் சூளையில் பணிபுரியும்போது அங்கு குடும்பத்தினருடன் தங்கி வேலை செய்துவந்த நிலையில்  மனநலம் பாதிக்கப்பட்ட 20 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த பெண்ணிற்கு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவர் 8 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவரவே இந்த சம்பவம் குறித்து மானாமதுரை மகளிர் காவல் நிலையத்தில் பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர். 

இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரனையில் முத்துமாரி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது.  எனவே  முத்துமாரி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.  

அந்த வழக்கின் தீர்ப்பு இன்று  சிவகங்கை மகிளா நீதிமன்றத்தில் வந்த போது முத்துமாரி மீதான குற்றம் உறுதி செய்யப்படவே நீதிபதி சரத்ராஜ் குற்றவாளி முத்துமாரிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ 50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்