Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ராணுவ வீரர் மனைவி தாக்கப்பட்ட விவகாரம் - மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தகவல்

Baskaran Updated:
ராணுவ வீரர் மனைவி தாக்கப்பட்ட விவகாரம் - மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தகவல்Representative Image.

திருவண்ணாமலை: பெண்களுக்கு பிரச்னை என்றால் தேசிய மகளிர் ஆணையம் உடனிருக்கும் என மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தெரிவித்துள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே படவேடு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரனின் மனைவி கீர்த்தி. படவேடு ரேணுகாம்பாள் ஆலயம் எதிரில் பேன்சி கடை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடையை காலி செய்ய ராமு வற்புறுத்தியதால் ஏற்பட்ட தகராறில் ராமுவை கீர்த்தியின் சகோததரர் ஜீவா கத்தியால் குத்தி காயப்படுத்தி உள்ளார். இது குறித்து போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், தன் மனைவியை சிலர் தாக்கி மானபங்கம் செய்ததாக ராணுவ வீரர் பிரபாகரன் ஜம்மு காஷ்மீரில் இருந்து வீடியோ வெளியிட்டதுடன் நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி-க்கு கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து விளக்கமளித்துள்ள திருவண்ணாமலை எஸ்.பி. ராணுவ வீரரின் மனைவி கீர்த்தியை யாரும் தாக்கவோ, மானபங்கம் செய்வோ இல்லை என தெரிவித்துள்ளார். கீர்த்தியின் சகோதரர் ஜீவா என்பவர் தாக்கியதில் தான் ராமு என்பவர் காயமடைந்து இருப்பதாகவும் யாரும் வதந்திகளை நம்பி பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார். 

இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமுவும் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பெண்களுக்கு ஒரு பிரச்னை என்றால் தேசிய மகளிர் ஆணையம் உடனிருக்கும். ராணுவ வீரர் மனைவி தாக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரம் தொடர்பான  விரிவான தகவல்களை அளிப்பதாக டிஜிபி சைலேந்திரபாபு உறுதி அளித்துள்ளார் என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்