Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சென்னையில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது..! முதலில் செல்பவருக்கே முன்னுரிமை..!

Saraswathi Updated:
சென்னையில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது..! முதலில் செல்பவருக்கே முன்னுரிமை..!Representative Image.

தமிழகத்தில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் உள்ள 82 ரேஷன் கடைகளில் இன்று தக்காளி விற்பனை தொடங்கியது.  

தமிழகத்தில் வெயிலின் தாக்கத்தால் தக்காளி செடிகள் கருகியதால், கடந்த சில வாரங்களாக வரத்து குறைந்து விலை அதிகரித்துவந்தது. கடந்த வாரத்தில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையானதால் ஏழை, நடுத்தர மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.  இதையடுத்து, தக்காளியை பதுக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பண், பண்ணை பசுமை கடைகள் மூலம் தக்காளியை கிலோ ரூ.60க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தார். 

இதைத் தொடர்ந்து, சில்லறை விற்பனையிலும் தக்காளியின் விலை ஓரளவு குறைந்தது. ஆனால், கடந்த 2 நாட்களாக தக்காளியின் விலை திடீரென கிலோ 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது.  இதையடுத்து, தக்காளி விலை மேலும் உயராமல் தடுப்பது குறித்தும்,  ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்வது தொடர்பாகவும் சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் பெரியகருப்பண், துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.  

அதைத் தொடர்ந்து, சென்னையில் முதல் கட்டமாக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை இன்று  முதல் தொடங்கப்படும் என்றும், வடசென்னை, மத்தியசென்னை, தென்சென்னை என மூன்று பிரிவுகளாகப் பிரித்து அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்றும் அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்தார்.

அதன்படி, இன்று காலை தேனாம்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் தக்காளி விற்பனை தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மீதமுள்ள 81 ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்பனை நடைபெறுகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்கப்படுகிறது. தக்காளி வாங்குதற்கு ரேஷன் அட்டை அவசியம் என்பது உள்ளிட்ட எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு மக்கள் சென்று தக்காளியை வாங்கிக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, சென்னையைப் போல் பிற மாவட்டங்களுக்கும் ரேஷன் மூலம் தக்காளி விற்பனை விரைவாகத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்