Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்!.. | Monsoon

Baskaran Updated:
பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்!.. | MonsoonRepresentative Image.

சென்னை: பருவமழையை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராக உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருவதாகவும் முதல்வர் தற்போதைய  நிலவரங்களை கேட்டு வருவதாக கூறினார்.  

மழையின் காரணமாக 6மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் உள்ள 22 சுரங்க பாதையில் கணேசபுரம் சுரங்கபாதையில் மட்டும் தண்ணீர் உள்ளது என்றும், அதை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். தற்போது வரை எந்தவிதமான  மனித உயிரிழப்போ, கால்நடைகள் உயிரிழப்போ ஏற்படவில்லை என கூறிய அவர், 4ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.  

83 இடங்களில்  மழைநீர் தேங்கிய நிலையில், 28 இடங்களில் முழுமையாக அகற்றப்பட்டதாகவும், 6 மரங்களும் 38 கிளைகளும் விழுந்துள்ள நிலையில் அவற்றை அகற்றும் பணியை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறினார். எதிர் வரும் பருவ மழைக்கும் தயார் நிலையில் உள்ளதாக கூறிய அவர் அனைத்து வித முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

மழைநீர் வடிகால்வாய் பணி 80% முடிந்ததன் காரணமாக தான் மழை நீர் பெருமளவு தேங்கவில்லை என்றும், மெட்ரோ பணி நடைப்பெறும் இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. அவற்றையும் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்