Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்..! உஷார் மக்களே...!

Muthu Kumar August 01, 2022 & 16:30 [IST]
தமிழகத்திற்கு ரெட் அலர்ட்..! உஷார் மக்களே...!Representative Image.

இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது வங்க கடலில் தென் – மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த சுழற்சி உருவாகியுள்ளது. இதனால் தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், கேரள மாநிலம் பத்தனம்திட்டா, இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய 18 மாவட்டங்களில்  கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்