Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தலிபான்கள், அல்கொய்தா இடையே வலுவடையும் உறவு:- ஐநா எச்சரிக்கை..!

Bala [IST]
தலிபான்கள், அல்கொய்தா இடையே வலுவடையும் உறவு:- ஐநா எச்சரிக்கை..!Representative Image.

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களுக்கும் அல்கொய்தாவுக்கும் இடையிலான உறவு நெருக்கமடைந்து வருவதாக ஐ.நா எச்சரித்துள்ளது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் பகுப்பாய்வு ஆதரவு மற்றும் தடைகள் கண்காணிப்பு குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) பயங்கரவாத குழுக்கள் இருப்பது தெரியவந்துள்ளதாகவும்,  அல் கொய்தாவுக்கு தலிபான் அரசு பாதுகாப்பான புகலிம் அளித்துள்ளதாகவும், இதனால் அல்கொய்தாவின் நடவடிக்கைகள் அங்கு வெளிப்படையாக நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதக் குழுவின் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடனின் மரணத்தைத் தொடர்ந்து அவருக்குப் பிறகு, அல்-ஜவாஹிரி 2011 ஆம் ஆண்டு முதல் அல்கொய்தாவின் தலைவராக இருந்து வருகிறார்.

பங்களாதேஷ், இந்தியா, மியான்மர் மற்றும் பாகிஸ்தானில்" இருந்து "அல்கொய்தாவுடன் இணைந்த 180 முதல் 400 போராளிகள்" ஆப்கானிஸ்தானின் "கஸ்னி, ஹெல்மண்ட், காந்தஹார், நிம்ரூஸ், பாக்டிகா மற்றும் ஜாபுல் ஆகிய மாகாணங்களில் உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. ஐநாவின் இந்த கருத்துக்கு, ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசு இன்னும் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்