Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கச்சத்தீவை இந்தியாவிற்கு கொடுக்க முடியாது - இலங்கை எம்பி சுளீர்..!

madhankumar May 30, 2022 & 11:37 [IST]
கச்சத்தீவை இந்தியாவிற்கு கொடுக்க முடியாது - இலங்கை எம்பி சுளீர்..!Representative Image.

சென்னையில் நடைபெற்ற நலத்திட்டங்களை தரைந்து வைக்கும் நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் முன் எடுத்துவைத்தார். 

அதில் ஒரு கோரிக்கையாக கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே சரியான தருணம், எனவே அதற்கான முடிவுகளை விரைந்து எடுத்து கச்சத்தீவை மீட்டு இந்தியா வசமாக வேண்டும் என பேசியிருந்தார். இந்நிலையில் இந்த செய்தி குறித்து இலங்கை செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அந்த நாட்டின் எம்பி சார்ள்ஸ் நிர்மலநாதன், கட்சதீவை திருப்பி அளிக்கக்கூடாது என்பதே வடக்கு தமிழர்கள், குறிப்பாக மீனவ மக்களின் நிலைப்பாடு ஆகும் அவ்வாறு திருப்பி அளித்தால் அது எங்களது மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே கச்சத்தீவை வழங்க முடியாது அதற்கான வாய்ப்புகள் இல்லை, என தெரிவித்துள்ளார். மேலும் தமிழக மீனவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் அவ்வாறு பேசியிருக்கலாம், ஆனால் கச்சத்தீவை திருப்பியளிக்க வாய்ப்புகள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரின் இந்தக் கோரிக்கை தொடர்பில் தமிழ்நாடு மற்றும் ஈழத்தமிழ் உறவில் பாதிப்புகள் ஏற்படாது எனவும் கூறியுள்ளார்.

ஒரு விஷயத்தில் இருவருக்கும் வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம், ஆனா அது உறவுகளை பாதிக்காது என அவர் கூறியதாக அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்