Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திருப்பூரில் அதிகரிக்கும் செயற்கை நூலிழை ஆடைகள்...தொழிலாளர்கள் வேதனை..!

madhankumar May 17, 2022 & 08:56 [IST]
திருப்பூரில் அதிகரிக்கும் செயற்கை நூலிழை ஆடைகள்...தொழிலாளர்கள் வேதனை..!Representative Image.

தமிழகத்தில் பருத்தி நூல் விலை உயர்வால் பின்னலாடை நிறுவனங்கள் கடும் வீழ்ச்சியை  சந்தித்து வருகின்றன. இந்நிலையில் தான் பெரும் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் செயற்கை நூலிழைகள் செய்யப்படும் துணி திருப்பூரின் உள்நாட்டு சந்தை பாதித்து வருவதாகவும் இதற்கு உடனடியாக தீர்வுகாணவேண்டும் என தமிழக அரசிற்கு தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆடை தயாரிப்பு சந்தையில் சர்வதேச கவனம் பெற்ற திருப்பூர் பின்னலாடைத் துறையில், ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வரை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் நடைபெற்றுவந்த நிலையில், வரலாறு காணாத நூல் விலை உயர்வு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பின்னலாடை தொழிலுக்கு பயன்படுத்தப்படும் பருத்தி நூல் கிலோ ரூ.200ல் இருந்து தற்போது ரூ.480 ஆக அதிகரித்துள்ளது. இதன் விலை தொடர்ந்து அதிகரிப்பதால், சர்வதேச சந்தையில் போட்டிபோட்டு தொடர்ந்து ஆர்டர்களை திருப்பூர் உற்பத்தியாளர்கள் எடுக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நூல் விலை உயர்வுக்கு மத்தியஅரசு உரிய தீர்வு காண வலியுறுத்தி திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி சார்ந்த அனைத்துத் துறையினரும் முழு உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது 40 சதவீதம் துறைதான் உற்பத்தி செயல்பாட்டில் உள்ளது. ஒரு பருத்தி நூல் பின்னலாடை வாங்கும் விலைக்கு 3 செயற்கை நூலிழை ஆடை வாங்கிவிடலாம் என்பதால், அதற்கான ஆர்டர்களை உள்நாட்டு வியாபாரிகள் திருப்பூரில் உள்ள உற்பத்தியாளர்களிடம் கோரத் தொடங்கி விட்டனர். ஏற்கனவே 20 சதவீதம் இந்த செயற்கை நூலிழை பின்னலாடை நிறுவனம் திருப்பூரை ஆக்கிரமித்துவிட்டது. இப்படியே போனார் பருத்தி நூல் ஆடைகள் பணக்காரர்களது ஆகிவிடும்.

எனவே இதனை கருத்தில் கொண்டு பருத்தி நூல் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பின்னலாடை தொழில் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்