Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இன்று முதல் மாஸ்க் அணியாவிட்டால் 500 அபராதம்...அதிரடி உத்தரவு..!

madhankumar July 06, 2022 & 08:26 [IST]
இன்று முதல் மாஸ்க் அணியாவிட்டால் 500 அபராதம்...அதிரடி உத்தரவு..!Representative Image.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை போன்ற மாவட்டங்களில் கொரோனாவானது அதிகமாக பரவி வருகிறது. அங்கு தினசரி பாதிப்பு விகிதம் படிப்படியாக உயர்ந்துவருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை 2வைத்து தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், 60 வயதை கடந்தவர்கள், இணை நோய் கொண்டவர்கள் உடனடியாக இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டுமெனவும் விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அனைவரும் கொரோனா குறைந்துவிட்டதாக கருதி சமூக இடைவெளியை பின்பற்றாமல், முக கவசம் அணியாமல் அலட்சியமாக இறந்துவிட்டனர். இதுவும் கொரோனா மீண்டும் பரவ ஒரு காரணமாக ஆகிவிட்டது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா  தடுப்பூசி போட்டு ஓராண்டு ஆகி உள்ளதால் பெரும்பாலானோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளதாகவும் 3வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசியை தகுதியானவர்கள் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் அதிமுக நடத்தும் பொதுக்குழு கூட்டத்தை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்த வேண்டும் எனவும் அந்த பொறுப்பு தலைமைக்கு இருக்க வேண்டும் என்றும்  10க்கும் அதிகமானோர் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளார்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்