Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகத்தில் எலி பேஸ்ட் விற்பனைக்கு தடை..! அமைச்சர் தகவல்..!

Muthu Kumar August 19, 2022 & 15:45 [IST]
தமிழகத்தில் எலி பேஸ்ட் விற்பனைக்கு தடை..! அமைச்சர் தகவல்..!Representative Image.

தமிழகத்தில் எலி பேஸ்ட் மற்றும் சாண பவுடர் விற்பனையை தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தற்கொலை செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இந்நிலையில், தற்கொலை செய்யும் பலர் எலி பேஸ்ட் மற்றும் சாண பவுடர் பயன்படுத்தி தற்கொலை செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் தற்கொலை சம்பவங்களை தடுக்க எலி பேஸ்ட் மற்றும் சாண பவுடர் விற்பனையை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும், எலி பேஸ்ட் சாப்பிட்டால் அது குடலில் ஒட்டிக்கொண்டு ரத்தத்தில் கலப்பதால் கல்லீரல் முழுவதும் செயலிழந்து ரத்தம் உறையும் தன்மை இலந்து விடுவதாக தகவல் கிடைத்துள்ளது.மேலும்,  ரத்தம் உறையாமை நிலை ஏற்படுவதால் மூளை மற்றும் நுரையீரலில் உள்ளுக்குள்ளேயே ரத்தம் கசிய ஆரம்பித்து இறந்து விடுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்