Wed ,Oct 23, 2024

சென்செக்ஸ் 80,081.98
-138.74sensex(-0.17%)
நிஃப்டி24,435.50
-36.60sensex(-0.15%)
USD
81.57
Exclusive

கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை...அமைச்சர் அறிவிப்பு..!

madhankumar June 15, 2022 & 19:45 [IST]
கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை...அமைச்சர் அறிவிப்பு..!Representative Image.

கல்லூரி மாணவியருக்கு ரூ.1,000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கிவைப்பார் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். மேலும் கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு உதவித்தொகையாக ரூ.1000 வழங்கும் திட்டம் தயார் நிலையில் உள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்ட உடன், ரூ.1,000 உறுதித்தொகை நேரடியாக மாணவியரின் வங்கிக்கணக்குக்கு செலுத்தப்படும்.

18 வயதைக் கடந்து சிலர் காதல் திருமணம் செய்து கொள்வதும் குழந்தை திருமணம் என்றே கருதப்படுகிறது. குழந்தைத் திருமணத்தை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். முதியோர் உதவித்தொகை வழங்கும் பணி இனி விரைவுபடுத்தப்படும்.

மேலும் முதியோர்களுக்கான கொடுஞ்செயல் எதிர்ப்புதினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. முதியோர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதியோர் இல்லங்களே கூடாது என்பதே அரசின் எண்ணம். ஆனால் சூழல் அப்படி இல்லை. தனியாக இருப்பது முதியோர்களுக்கு பாதுகாப்பில்லை என்பதால், முதியோர் இல்லங்களைத் தேடி பலர் வருகின்றனர், என கீதாஜீவன் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்