Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

இந்த 6 நாடுகளின் பயணிகளுக்கு கொரோனா சோதனை கட்டாயம் - மத்திய அரசு அதிரடி! 

KANIMOZHI Updated:
இந்த 6 நாடுகளின் பயணிகளுக்கு கொரோனா சோதனை கட்டாயம் - மத்திய அரசு அதிரடி! Representative Image.

சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் கொரோனா பரிசோதனை அறிக்கையை பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். 

சீனா மற்றும் அதனையொட்டியுள்ள கிழக்கு ஆசிய நாடுகளில் உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று கிடுகிடுவென பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் எட்டிபார்க்க ஆரம்பித்திருக்கும் கொரோனா தொற்று, ஜனவரி மாதத்தில் திகுதிகுவென அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

கடந்த ஆறு வாரங்களில் உலக அளவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்தாலும், இந்தியாவில் கோவிட்-19 பாதிப்புகள் தொடர்ந்து குறைவாகவே உள்ளன, கடந்த 24 மணி நேரத்தில் 188 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனிடையே தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக அரசு முகக்கவசம் அணிவதையும், விமானநிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதையும் காட்டாயமாக்கியுள்ளது. 

இந்நிலையில், சீனா, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங், தென்கொரிய, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்திருப்பது கட்டாயம் என்றும், மேலும் பரிசோதனை முடிவுகள் அடங்கிய சான்றிதழை ஏர் சுவிதா இணையதளத்தில் பதிவிடவேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்