Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Russia Ukraine War: ரஷ்ய படைகளை விரட்டியடித்த உக்ரைன்...சிதறி ஓடும் ரஷ்ய ராணுவத்தினர்.!

madhankumar May 17, 2022 & 10:21 [IST]
Russia Ukraine War: ரஷ்ய படைகளை விரட்டியடித்த உக்ரைன்...சிதறி ஓடும் ரஷ்ய ராணுவத்தினர்.!Representative Image.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதை எதிர்த்து அந்நாட்டின் மீது போர் தொடுத்த ரஷ்யா 3வது மாதமாக சண்டையிட்டு வருகிறது. மரியுபோல், கார்கிவ் நகரங்களையும், தலைநகர் கீவ்வின் புறநகர்களையும் சர்வ நாசமாக்கிய ரஷ்ய படை தற்போது போரில் தொய்வடைந்துள்ளது. மேலும் உக்ரைனின் 2வது பெரிய நகரமான கார்கிவ்வில் இருந்து ரஷ்ய படைகள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளன. இதே போல கிழக்கு உக்ரைனான டான்பாஸையும் மீட்க உக்ரைன் சண்டையை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான போரில் உக்ரைன் கை ஓங்கி இருக்கிறது.

உக்ரைனுக்கு அமெரிக்கா போன்ற நாடுகள் ஆயுதம் கொடுத்து உதவி வருகின்றனர். மேலும் நேட்டோ படைகளும் உக்ரைனுக்கு உதவும் என அறிவித்துள்ளது. இதானால் போரில் உக்ரைன் காய் ஓங்கியுள்ளது. மேலும் நீண்ட சண்டைக்குப் பிறகு நாட்டின் 2வது பெரிய நகரமான கார்கிவ்வில் இருந்து ரஷ்ய படைகளை உக்ரைன் விரட்டி அடித்துள்ளது. உக்ரைன் ராணுவம், ரஷ்யாவின் எல்லை வரை ரஷ்ய படையினரை பின்னுக்கு தள்ளியிருப்பதாக பிராந்திய ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

மேலும் கார்கீவின் பகுதிகளில் உக்ரைன் ராணுவ படையினர் டேங்கர் வண்டிகளில் வளம் வருவதை போன்ற விடியோவை அந்த நாடு வெளியிட்டுள்ளது. இதனால் உக்ரைன் போரை தன வசம் கொண்டுவந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் கார்கிவ்வின் இசூம் பகுதியில் மட்டும் ரஷ்யா தனது நிலையை தக்க வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதே போல மரியுபோலில் உள்ள இரும்பு ஆலையில் இன்னும் தொடர்ந்து சண்டை நடக்கிறது. 

இதனால் ஆத்திரமடைந்த ரஷ்ய படைகள் உக்ரைனின் குடியிருப்பு பகுதிகள், மருத்துவமனை பகுதிகளில் ஏவுகணைகளை வீசி வருகிறது, உக்ரைனின் தலைநகரை கைப்பற்ற முடியாத நிலையில் டான்பாஸை கட்டுப்பாட்டில் கொண்டு வருவது ரஷ்யாவின் முக்கிய நோக்கமாக உள்ளது.

 இதற்கிடையில் டான்பாஸ் பகுதியில் இருந்து ரஷ்ய படைகளை வெளியேற்றும் முயற்சியில் தற்போது உக்ரேனிய அபிடேக இருப்பதாக அந்த நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்