Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டி - பெங்களூருவில் இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்..!

Saraswathi Updated:
தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் போட்டி - பெங்களூருவில் இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்..!Representative Image.

பெங்களூருவில் இன்று இரவு நடைபெறும் தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன.  

தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடர் பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் ஏ, பி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ‘ஏ’ பிரிவில் 8 முறை சாம்பியனான இந்தியா, குவைத், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய அணிகளும்,  ‘பி’ பிரிவில் வங்கதேசம், பூடான், லெபனான், மாலத்தீவுகள் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.  

அரை இறுதிச் சுற்றுக்கு லீக் சுற்றின் அடிப்படையில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் தலா 2 அணிகள் தகுதிபெறும். அதைத் தொடர்ந்து, அரை இறுதிப் போட்டிகள்   ஜூலை 1-ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து, ஜூலை 4 ல் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இந்த சாம்பியன்ஷிப் போட்டியை தற்போது நடத்தும் சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி, கடந்த வாரம் இன்டர்காண்டினென்டல் கோப்பையை வென்ற உற்சாகத்துடன் போட்டியிலும் களமிறங்குகிறது.  

பெங்களூருவில் இன்று இரவு தொடங்கும் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதுகிறது.  உலக கால்பந்துப் போட்டிக்கான தரவரிசைப்  (பிஃபா) பட்டியலில் இந்திய அணி 101-வது இடத்திலும், பாகிஸ்தான் அணி 195-வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.  
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்