இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவையை மேம்படுத்துவதற்காகவே ‘வந்தே பாரத் திட்டம்’ என்ற அதிவேக விரைவு ரயில் திட்டம் துவங்கப்பட்டது. தற்போது இதுவே மிகவும் பிரபலமான போக்குவரத்து முறையாகவும் மாறியுள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற ரயில்களை விட மிக வேகமாகவும், இலகுவாகவும் இருக்கிறது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆனது, இந்தியாவின் இரண்டாவது அதிவேக ரயில் ஆகும். முதலாவது இடத்தில் இருப்பது கதிமான் எக்ஸ்பிரஸ் ஆகும். வந்தே பாரத் ஆனது ரயில் 18 எனவும் அழைக்கப்படுகிறது. இது பயண நேரத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், பயணிகளுக்கு ஒரு புது வித அனுபவத்தை கொடுக்கிறது. இந்த வந்தே பாரத் ரயிலில் தானியங்கி கதவுகள், குளிர்சாதன வசதி, Wi-Fi வசதி, GPS, ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் என பல்வேறு அதிநவீன வசதிகள் உள்ளன.
கடந்த ஏப்ரல் 8, 2023 அன்று இந்தியாவின் 12 ஆவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் செகந்திராபாத் முதல் திருப்பதி வரை இயக்கப்பட்டது. இந்த ரயில் அதே பாதையில் செல்லக்கூடிய மற்ற இரயில்களை விட முன்னதாகவே செகந்திராபாத்-லிருந்து திருப்பது வரை சென்றடைந்து விடுகிறது. இந்த பதிவில் செகந்திராபாத் – திருப்பதி வந்தே பாரத் ரயிலின் வழித்தடம், நேர அட்டவணை, கட்டணம் குறித்த முழுவிவரங்களைப் பார்க்கலாம்.
வழி
இந்த ரயில் வாரத்தில் செவ்வாய்கிழமைகள் தவிர்த்து வாரத்தில் மற்ற ஆறு நாள்களும் இயக்கப்படுகிறது. செகந்திராபாத் - திருப்பதி செல்லும் இந்த வந்தே பாரத் ரயில் நல்கொண்டா, குண்டூர், ஓங்கோல், மற்றும் நெல்லூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும். பொதுவாக செகந்திராபாத் – திருப்பதி பயண நேரம் பயணம் செய்யும் இரயில்களைப் பொறுத்து மாறுபடும். அதன் படி, 11 மணி முதல் 15 மணி 55 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளும். ஆனால், வந்தே பாரத் இரயில் 8 மணி 30 நிமிடங்களிலேயே சென்று விடுகிறது.
வந்தே பாரத் இரயில் |
துவங்கப்பட்ட நாள் |
இயங்கும் நாள் |
தூரம் |
பயண நேரம் |
புறப்படும் / வந்தடையும் நேரம் |
செகந்திராபாத் – திருப்பதி [எண்: 20701]
திருப்பதி – செகந்திராபாத் [எண்: 20702] |
ஏப்ரல் 8, 2023 |
செவ்வாய் கிழமை தவிர மற்ற ஆறு நாள்களும் இயங்கும் |
662 கிமீ |
8 மணி 30 நிமிடம் |
06.00 AM – 02.30 PM
3.15 PM – 11.45 PM |
செகந்திராபாத் – திருப்பதி [எண்: 20701] வந்தே பாரத் நேர அட்டவணை
செகந்திராபாத்தில் இருந்து காலை 06.00 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் இரயில் [20701] ஆனது, நல்கொண்டாவிற்கு காலை 07.19-க்கு வந்தடைகிறது. நல்கொண்டாவில் இருந்து, காலை 07.20-க்கு புறப்பட்டு குண்டூர் ஜங்ஷனுக்கு காலை 09.45-க்கு வந்தடைகிறது. பின், குண்டூரிலிருந்து காலை 09.50-க்கு புறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஓங்கோல்-க்கு காலை 11.09 மணிக்கு வந்தடைந்து, காலை 11.10-க்கு புறப்பட்டு, மதியம் 12.29 மணிக்கு நெல்லூருக்கு விரைகிறது. இங்கிருந்து, மதியம் 12.30 மணிக்கு புறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, திருப்பதிக்கு மதியம் 02.30-க்கு விரைகிறது.
செகந்திராபாத் – திருப்பதி [எண்: 20701] |
வந்தடையும் நேரம் இரயில்வே நேரம் |
புறப்படும் நேரம் இரயில்வே நேரம் |
செகந்திராபாத் |
- |
06.00 |
நல்கொண்டா |
07.19 |
07.20 |
குண்டூர் ஜேஎன் |
09.45 |
09.50 |
ஓங்கோல் |
11.09 |
11.10 |
நெல்லூர் |
12.29 |
12.30 |
திருப்பதி |
14.30 |
- |
திருப்பதி – செகந்திராபாத் [எண்: 20702] வந்தே பாரத் நேர அட்டவணை
திருப்பதி முதல் செகந்திராபாத் வரையிலான வந்தே பாரத் ரயில் [20702], திருப்பதியில் இருந்து மதியம் 03.15 மணிக்கு புறப்பட்டு மாலை 5.19 மணிக்கு நெல்லூர் வந்தடைகிறது. பிறகு, இங்கிருந்து மாலை 5.20-க்கு புறப்பட்டு, ஒங்கோலுக்கு மாலை 06.29- மணிக்கு வந்தடைந்து பின் மாலை 06.30 மணிக்கு புறப்படுகிறது. அதன் பிறகு, குண்டூர் ஜங்ஷனுக்கு இரவு 07.45 மணிக்கு வந்தடைந்து, 07.50 மணிக்கு புறப்படுகிறது. இங்கிருந்து நல்கொண்டாவிற்கு இரவு 08.09 மணிக்கு வந்தடைகிறது. பின், நல்கொண்டாவில் இருந்து செகந்திராபாத்திற்கு இரவு 11.45 மணிக்கு வந்தடைகிறது.
திருப்பதி – செகந்திராபாத் [எண்: 20702] |
வந்தடையும் நேரம் இரயில்வே நேரம் |
புறப்படும் நேரம் இரயில்வே நேரம் |
திருப்பதி |
- |
15.15 |
நெல்லூர் |
17.19 |
17.20 |
ஓங்கோல் |
18.29 |
18.30 |
குண்டூர் ஜேஎன் |
19.45 |
19.50 |
நல்கொண்டா |
22.09 |
22.10 |
செகந்திராபாத் |
23.45 |
- |
கட்டணம்
இந்த வந்தே பாரத் இரயிலுக்கான டிக்கெட் கட்டணம் ஆனது, பயண வகுப்பைப் பொறுத்து மாறுபடும். அதன் படி, செகந்திராபாத்-லிருந்து திருப்பதி வரை செல்லும் வந்தே பாரத் ரயிலின் சேர் கார் கட்டணம்
வந்தே பாரத் இரயில் |
சேர் கார் கட்டணம் |
எக்ஸ்கியூட்டிவ் வகுப்பு கட்டணம் |
செகந்திராபாத் – திருப்பதி [எண்: 20701] |
ரூ.1680 |
ரூ.3080 |
திருப்பதி – செகந்திராபாத் [எண்: 20702] |
ரூ.1625 |
ரூ.3030 |
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…