Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

டெல்லி கான்ட் – அஜ்மீர் வந்தே பாரத் ரயில்: புறப்படும் நேரம், டிக்கெட் விலை மற்றும் முழு விவரங்கள்..! | Delhi Cantt to Ajmer Vande Bharat Train

Gowthami Subramani Updated:
டெல்லி கான்ட் – அஜ்மீர் வந்தே பாரத் ரயில்: புறப்படும் நேரம், டிக்கெட் விலை மற்றும் முழு விவரங்கள்..! | Delhi Cantt to Ajmer Vande Bharat TrainRepresentative Image.

இந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு இடையேயான ரயில் சேவையை மேம்படுத்துவதற்காகவே ‘வந்தே பாரத் திட்டம்’ என்ற அதிவேக விரைவு ரயில் திட்டம் துவங்கப்பட்டது. தற்போது இதுவே மிகவும் பிரபலமான போக்குவரத்து முறையாகவும் மாறியுள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற ரயில்களை விட மிக வேகமாகவும், இலகுவாகவும் இருக்கிறது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆனது, இந்தியாவின் இரண்டாவது அதிவேக ரயில் ஆகும். முதலாவது இடத்தில் இருப்பது கதிமான் எக்ஸ்பிரஸ் ஆகும். வந்தே பாரத் ஆனது ரயில் 18 எனவும் அழைக்கப்படுகிறது. இது பயண நேரத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், பயணிகளுக்கு ஒரு புது வித அனுபவத்தை கொடுக்கிறது. இந்த வந்தே பாரத் ரயிலில் தானியங்கி கதவுகள், குளிர்சாதன வசதி, Wi-Fi வசதி, GPS, ஆடியோ, வீடியோ, பயோ டாய்லெட்டுகள் என பல்வேறு அதிநவீன வசதிகள் உள்ளன.

கடந்த ஏப்ரல் 13, 2023 அன்று இந்தியாவின் 14 ஆவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லி கான்ட்-லிருந்து அஜ்மீர்-க்கு இயக்கப்பட்டது. இந்த ரயில் அதே பாதையில் செல்லக்கூடிய மற்ற இரயில்களை விட முன்னதாகவே டெல்லி கான்ட்-லிருந்து அஜ்மீர்-க்கு சென்றடைந்து விடுகிறது. இந்த பதிவில் டெல்லி கான்ட் –அஜ்மீர் வந்தே பாரத் ரயிலின் வழித்தடம், நேர அட்டவணை, கட்டணம் குறித்த முழுவிவரங்களைப் பார்க்கலாம்.

வழி

இந்த ரயில் வாரத்தில் புதன்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து ஆறு நாள்களும் இயக்கப்படுகிறது. டெல்லி கான்ட்-லிருந்து அஜ்மீர் செல்லும் இந்த வந்தே பாரத் ரயில் குர்கான், அல்வார், ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும். பொதுவாக டெல்லி கான்ட் – அஜ்மீர் பயண நேரம் பயணம் செய்யும் இரயில்களைப் பொறுத்து மாறுபடும். அதன் படி, 6 மணி நேரம் 10 நிமிடம் முதல் 9 மணி நேரம் 15 நிமிடம் வரை எடுத்துக் கொள்ளும். ஆனால், வந்தே பாரத் இரயில் 5 மணி 15 நிமிடத்திலேயே சென்று விடுகிறது.

வந்தே பாரத் இரயில்

துவங்கப்பட்ட நாள்

இயங்கும் நாள்

தூரம்

பயண நேரம்

புறப்படும் / வந்தடையும் நேரம்

டெல்லி கான்ட் – அஜ்மீர் [எண்: 20978]

 

அஜ்மீர் – டெல்லி கான்ட் [எண்: 20977]

ஏப்ரல் 13, 2023

புதன் கிழமையைத் தவிர மற்ற அனைத்து நாள்களும் இயங்கும்

429 கிமீ

5 மணி 15 நிமிடம்

06.40 PM – 11:55 PM

 

 

06:20 AM – 11.35 AM

 

டெல்லி கான்ட் – அஜ்மீர் [20978] வந்தே பாரத் நேர அட்டவணை:

தினமும், மாலை 06.40 மணிக்கு டெல்லி கான்ட்-லிருந்து புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் [எண்: 20978] மாலை 06.51-க்கு குர்கான் வந்தடையும். குர்கான்-லிருந்து மாலை 06.53-க்கு புறப்படும் இந்த இரயில் அல்வார்-க்கு இரவு 08.17-க்கு வந்தடைகிறது. அல்வார்-லிருந்து இரவு 08.19-க்கு புறப்பட்டு இரவு 10.05-க்கு ஜெய்ப்பூர் வந்தடையும். ஜெய்ப்பூரில் இருந்து இரவு 10.10-க்கு புறப்பட்டு, அஜ்மீர்-க்கு இரவு 11.55-க்கு சென்றடைகிறது.

டெல்லி கான்ட் – அஜ்மீர் [எண்: 20978]

வந்தடையும் நேரம்

இரயில்வே நேரம்

புறப்படும் நேரம்

இரயில்வே நேரம்

டெல்லி கான்ட்

-

18.40

குர்கான்

18.51

18.53

அல்வார்

20.17

20.19

ஜெய்ப்பூர்

22.05

22.10

அஜ்மீர்

23.55

-

 

அஜ்மீர் – டெல்லி கான்ட் [20977] வந்தே பாரத் நேர அட்டவணை:

அஜ்மீர் முதல் டெல்லி கான்ட் வரையிலான வந்தே பாரத் இரயில் [எண்: 22977], அஜ்மீர்-லிருந்து காலை 06.20-க்கு புறப்படும். பின், ஜெய்ப்பூருக்கு காலை 07.50-க்கு வந்தடைந்து 07.55-க்கு புறப்படுகிறது. இந்த இரயில் அல்வார்-க்கு காலை 09.35க்கு வந்தடையும். இங்கு 2 நிமிடங்கள் காத்திருந்து 09.37-க்கு புறப்படும். அதன் பின், குர்கான்-க்கு காலை 11.15 மணிக்கு வந்தடைந்து காலை 11.17-க்கு புறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து டெல்லி கான்ட்-க்கு 11.35-க்கு சென்றடைகிறது.

அஜ்மீர் - டெல்லி கான்ட் [எண்: 20977]

வந்தடையும் நேரம்

இரயில்வே நேரம்

புறப்படும் நேரம்

இரயில்வே நேரம்

அஜ்மீர்

-

06.20

ஜெய்ப்பூர்

07.50

07.55

அல்வார்

09.35

09.37

குர்கான்

11.15

11.17

டெல்லி கான்ட்

11.35

-

 

கட்டணம்

இந்த வந்தே பாரத் இரயிலுக்கான டிக்கெட் கட்டணம் ஆனது பயண வகுப்பைப் பொறுத்து மாறுபடும். அதன் படி, டெல்லி கான்ட் முதல் அஜ்மீர் வரை செல்லும் வந்தே பாரத் ரயிலின் சேர் கார் கட்டணம் ரூ.1250 ஆகவும், எக்ஸ்கியூட்டிவ் வகுப்பில் ரூ.2270 வசூலிக்கப்படுகிறது. அதே போல, அஜ்மீர் முதல் டெல்லி கான்ட் வரை செல்லக்கூடிய ரயிலின் சேர் கார் கட்டணமாக ரூ.1085-ம், எக்ஸ்கியூட்டிவ் வகுப்பில் ரூ.3355-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

வந்தே பாரத் இரயில்

சேர் கார் கட்டணம்

எக்ஸ்கியூட்டிவ் வகுப்பு கட்டணம்

டெல்லி கான்ட் – அஜ்மீர் [22978]

ரூ.1250

ரூ.2270

அஜ்மீர் - டெல்லி கான்ட் [எண்: 20977]

ரூ.1085

ரூ.2075

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்