Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாணவர்களின் தொடர் தற்கொலை.... அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க உத்தரவு.!

madhankumar July 31, 2022 & 11:36 [IST]
மாணவர்களின் தொடர் தற்கொலை.... அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க உத்தரவு.!Representative Image.

சமீபகாலமாக தமிழக பள்ளி மாணவர்கள் அதிகமாக தற்கொலை செய்துகொள்ளும் செயல்கள் அதிகமாக நடந்துவருகிறது. மாணவ, மாணவிகள் அதிகளவிலான மன அழுத்தத்தில் இருப்பது இதற்கு மிக  முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. செல்போன் பார்ப்பதைக் கண்டித்ததற்காக, பட்டுப் புடவைக் கட்டியதற்காக அக்கா திட்டியது என தினசரி வாழ்க்கையில் மிக எளிதில் கடந்து செல்லக்கூடிய விஷயங்களுக்கும் இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலோர் சோர்ந்து விடுகின்றனர்.

சமீபத்தில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி பள்ளியின் மாடியில் இருந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது, இதனை தொடர்ந்து நடந்த கலவரத்தை சம்மந்தப்பட்ட பள்ளி போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. ஸ்ரீமதியின் மர்ம மரணம் குறித்து அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரனைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு மாநில தலைமை குற்றவியல் அரசு வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, அறிக்கையை அவர் தாக்கல் செய்தார்.  மாணவி மரணம் மற்றும் கலவரத்தின் போது வதந்தி பரப்பி, ஊடக விசாரணை நடத்திய 63 யூடியூப் சேனல்கள், 31 டுவிட்டர் கணக்குகள், 27 முகநூல் பக்கங்கள் ஆகியவற்றில் உள்ள பதிவுகளை நீக்கும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என்றும், மாவட்டத்துக்கு ஒரு மனநல ஆலோசகராவது இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விடுதிகளுடன் கூடிய பள்ளிகளில் மனநல ஆலோசகர்கள் இருப்பது மிகவும் அவசியம் என்றும்,  இது போன்ற சம்பவங்களை மீண்டும் மீண்டும் பெரிது படுத்தி மற்ற மாணவர்களின் மனதிலும் தாக்கத்தை ஊடகங்கள் ஏற்படுத்தக் கூடாது என கூறி இந்த  வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 29ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்