Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்...அமைச்சர் தா.மோ.அன்பரசன்...!

madhankumar August 05, 2022 & 09:02 [IST]
அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்...அமைச்சர் தா.மோ.அன்பரசன்...!Representative Image.

தமிழகத்தில் ரூ.20.26 கோடி மதிப்பில் 865 அரசு நடுநிலை பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்துவருவதாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ மாவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

பின்னர் பேசிய அமைச்சர் அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 62 அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 2021-2022-ம் கல்வி ஆண்டில் 11-ம் வகுப்பு பயின்ற மாணவர்கள் எண்ணிக்கை 4,475, மாணவியர் எண்ணிக்கை 5,076. மொத்தம் 9,551 மாணவ, மாணவிகளுக்கு இந்த கல்வியாண்டில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.4 கோடியே 84 லட்சத்துக்கு 97 ஆயிரத்து 517 மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன என தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக அரசு 1,541 தொடக்க பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 1,44,000 மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை ரூ.33 கோடியே 56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என கூறினார், மேலும் ஒன்று முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் 15 லட்சத்து 99 ஆயிரம் குழந்தைகளுக்கு ஆறு கோடியே இருபது லட்சம் செலவில் எண்ணும் எழுத்தும் என்ற இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது.

மேலும் தமிழகத்தில் ரூ.20.26 கோடியில் 865 அரசு நடு நிலை பள்ளிகளில் ஸ்மார்வகுப்புகள் தொடங்கும்பணி முழு வீச்சில் நடந்துவருவதாக தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தொழில் கல்லூரிகளில் பயில 7.5 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டு படிக்கும் கல்வி கட்டணம் கூட அரசே ஏற்றுக் கொள்ளும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்