Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ராணுவ வீரர் மனைவி தாக்கப்பட்டரா?- மாவட்ட போலீசார் விளக்கம்

Baskaran Updated:
ராணுவ வீரர் மனைவி தாக்கப்பட்டரா?- மாவட்ட போலீசார் விளக்கம்Representative Image.

திருவண்ணாமலை: தனது மனைவி தாக்கப்பட்டதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கும்படி ராணுவ வீரர் வீடியோ மூலம் தமிழக டிஜிபிக்கு கோரிக்கை வைத்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கூறுவதில் உண்மையில்லை என மாவட்ட எஸ்.பி விளக்கமளித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள படவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். ராணுவ வீரரான இவரது மனைவி கீர்த்தி, அதேப்பகுதியில் உள்ள ஸ்ரீரேணுகாம்பாள் ஆலயத்தின் எதிரே கடை வைத்திருக்கும் குன்னத்தூரை சேர்ந்த ராமு என்பவருக்கு சொந்தமான மேல்கடையை வாடகைக்கு எடுத்து பேன்ஸி ஸ்டோர் நடத்தி வருகிறார். இந்நிலையில் ராமு கீர்த்தியை கடையை காலி செய்யுமாறு கோரியுள்ளார்.

அதற்கு அவர், தான் கொடுத்த ரூ.16லட்சத்தை திருப்பி கேட்டதாக தெரிகிறது. மேலும் நேற்று ராமு சிலருடம் வந்து பேன்ஸி ஸ்டோரில் உள்ள பொருட்களை எடுத்து வெளியில் வீசி கடையை காலி செய்ததாக தெரிகிறது.

கடையை காலி செய்ய கால அவகாசம் கொடுத்தும் கீர்த்தி கடையை காலி செய்யதாதல், பொருட்களை அப்புறப்படுத்தியதாகவும், அப்போது அங்கு வந்த கீர்த்தியின் சகோதரர் ஜீவா ராமுவை கத்தியால் தாக்கியதாகவும், மேலும் இந்த பிரச்னையில் கீர்த்திக்கும் காயமேற்பட்டதாக கூறப்படுகிறது. இருத்தரப்பினரும் புகார் அளித்த நிலையில் சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் எல்லையில்  பணிபுரிந்து வரும் பிரபாகரன், தமிழக டிஜிபி சைலேந்திர பாபுக்கு வீடியோ மூலம் புகார் அளித்திருந்தார்.

அதில், திருவண்ணாமலை மாவட்டம் படவேடு கிராமத்தில் அறநிலைக்கு சொந்தமான இடத்தில் எனது மனைவி கடை நடத்தி வருகிறார். அந்த இடத்தை காலி செய்யக் கோரி தகராறு செய்ததுடன், ரத்தம் வரும்படி எனது மனைவியை சுமார் 120பேர் சூழ்ந்து தாக்கியுள்ளனர். இது குறித்து மாவட்ட எஸ்.பிக்கு புகார் அனுப்பியுள்ளேன். மேலும் என் மனைவியை அரை நிர்வாணமாக்கி அடித்துள்ளனர். இது எந்த உலகத்தில் நியாயம், என்று கேட்டு காப்பாற்ற கோரி மண்டியிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உள்ளூர் காவல் நிலையத்தில் கூறியதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். போகிற இடத்தில் எல்லாம் அடிக்கிறார்களாம். என் மனைவியை அரை நிர்வாணமாக்கி அடித்திருக்கிறார்கள். எப்படியாவது என் மனைவியை காப்பாற்றுங்கள்.. ராணுவ வீரனாக இருந்துகொண்டு கீழே விழுந்து கேட்கக் கூடாது. ஆனாலும் கேட்கிறேன். என் குடும்பத்தினரை காப்பாற்றுங்கள்” என்று மண்டியிட்டு கூறியிந்தார்.

இது தொடர்பாக மாவட்ட போலீசார் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில், “ஒப்பந்தத்தின் படி வாங்கிய பணத்தை திரும்ப கொடுத்து கடையை காலி செய்ய ராமு சொன்ன நிலையில், கீர்த்தியின் சகோதரர் ஜீவா அவரை தாக்கியுள்ளார். இதனால் ஆவேசமடைந்த அருகிலிருந்த பொதுமக்கள் ராமுவுக்கு ஆதரவாக அவர் தாக்கப்பட்டதை தட்டிக் கேட்டுள்ளனர்.

இதில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரத்தில் கடையில் இருந்த பொருட்களை எல்லாம் வெளியே போட்டுள்ளனர். ஆனால் கீர்த்தியையோ, அவரது தாயாரையோ தாக்கியதாகவோ, அவமதித்ததாகவோ கூறப்பட்ட நிலையில் அப்படி இரு சம்பவம் நடக்கவில்லை என தெரிய வந்தது. இது மிகைப்படுத்தி சொல்லப்பட்டுள்ள தகவல் என்றும், இரு தரப்பும் சந்தவாசல் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்” என திருவண்ணாமலை மாவட்ட போலீசார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்