Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தென் இந்தியா புறக்கணிப்பு....Nothing Phone நிறுவனத்தை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

madhankumar July 13, 2022 & 12:39 [IST]
தென் இந்தியா புறக்கணிப்பு....Nothing Phone நிறுவனத்தை வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!Representative Image.

இந்தியாவில் வரும் ஜூலை 21 ஆம் தேதி அறிமுகமாகவிருக்கும் நத்திங் 1 (Nothing 1) ஸ்மார்ட்போன் நிறுவனம் தென் இந்தியாவை புகறக்கணிப்பதாக கூறி சமூக வலைத்தளங்களில் அந்த நிறுவனத்தை தமிழ் நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

பொதுவாக சந்தையில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்று அறிமுகமாகும்போது அதன் ரிவியூ யூனிட் என ஒரு செல்போனை பிரபல யூடியூப் சேனல்களுக்கு கொடுத்து அதன் சிறப்பம்சம், அந்த போன் எப்படி இயங்குகிறது, அதன் வடிவமைப்பு போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்குவது வழக்கம். அந்த வகையில் புதிதாக செல்போன் வாங்க விரும்பும் நபர்களுக்கு அந்த ரிவியூ மிகவும் உதவிகரமாக இருந்துவந்தது.

இந்நிலையில் லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் Nothing செல்போன் நிறுவனம் அதன் நத்திங் 1 செல்போனை வரும் 21 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. ஆனால் அந்த செல்போனின் ரிவியூ யூனிட் வட இந்தியாவில் இருக்கும் யூடியூபர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ரிவியூ கொடுப்பவர்களுக்கு மட்டும் இந்த போன் வழங்கப்பட்டுள்ளது என குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. 

மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவை பிராந்திய மொழிகள் தான் அதனை சார்ந்த யூடியூப் சேனல்களுக்கு ரிவியூ யூனிட் கொடுக்க முடியாது என கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய தகவலாக இந்தியாவிற்கான Nothing போன் தயாரிக்கும் இடம் தென் இந்தியா அதாவது தமிழகத்தில் தான் உள்ளது அப்படி இருந்தும் தென் இந்தியர்களுக்கு இந்த போன் தரப்படவில்லை என கூறி பிரபல யூடியூப் சேனல்கள் வைத்திருக்கும் நபர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் இது குறித்து ட்விட்டரில் ஹாஸ்டாக் மூலம் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்