Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இலங்கை அதிபர் ராஜினாமா....கலவரத்தின் எதிரொலி..!

madhankumar July 11, 2022 & 11:27 [IST]
இலங்கை அதிபர் ராஜினாமா....கலவரத்தின் எதிரொலி..!Representative Image.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் ஆரம்ப காலம் முதல் மக்கள் இலங்கை அரசிற்கு எதிரான போராட்டங்களை கையிலெடுத்துவருகின்றனர்.

பசி, பட்டினி, பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, விலை உயர்வு, வேலையின்மை போன்ற பிரச்சினைகளால் பொது மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொதித்தெழுந்த மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இலங்கை அதிபர் மாளிகையை சுற்றுவளைத்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாளிகைக்குள் நுழைந்து தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதனால் அந்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலர் பொதுமக்களிடம் இருந்து தப்பித்து தலைமறைவாகி வருகின்றனர். இருப்பினும் மக்களின் பொருளாதார பிரச்சினை முடிவுக்கு வரவில்லை.

இதனால் நீடித்துவரும் பதற்றமான சூழ்நிலைக்கு நடுவே இலங்கை அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் எனதகவல்கள் வெளியாகியுள்ளன. தனது ராஜினாமா கடிதத்தை, பிரதமர் ரணில் விக்ரமசிக்கேவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தான் தங்கியிருந்த அதிபர் மாளிகையில் இருந்தும் கோத்தபய ராஜபக்சே தப்பியோடிவிட்டார் என்று கூறப்படுகிறது. தற்போது அவர் எங்கு இருக்கிறார்? யாரிடம் தஞ்சம் அடைந்துள்ளார் என்பது போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது இதனால் போராட்டக்காரர்கள் குழப்பமடைந்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்