Thu ,Nov 07, 2024

சென்செக்ஸ் 80,378.13
901.50sensex(1.13%)
நிஃப்டி24,484.05
270.75sensex(1.12%)
USD
81.57
Exclusive

மாநில உரிமைகளுக்கு ஆபத்து.. பிரதமர் தலையிட வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் கடிதம்!!

Sekar September 23, 2022 & 11:22 [IST]
மாநில உரிமைகளுக்கு ஆபத்து.. பிரதமர் தலையிட வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் கடிதம்!!Representative Image.

மத்திய அரசு கொண்டு வரும் இந்திய துறைமுகங்கள் மசோதா 2022இல் இடம் பெற்றுள்ள சில ஷரத்துகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள ஸ்டாலின், இந்திய துறைமுகங்கள் மசோதா 2022ல் மாநில அரசுகளின் உரிமைகளை பாதிக்கக்கூடிய வகையில் இடம்பெற்றுள்ள பிரிவுகளை அகற்றிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தனது கடிதத்தில், “கடல்சார் மாநிலங்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் சில பரிந்துரைகளுக்கு இடமளித்தாலும், திருத்தப்பட்ட வரைவு வரைவு இந்திய துறைமுக மசோதா, 2022 இன்னும் நமது கவலைகளைப் புறக்கணித்து, மையப்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை ஆணையத்தை திணிப்பதன் மூலம் மாநிலண்களின் குறிப்பிட்ட முயற்சிகளை முடக்குகிறது.

எனவே, வரைவு மசோதாவின் அத்தியாயங்கள் II, III & V ஐ நீக்கி, முக்கிய அல்லாத துறைமுகங்களின் தொடர்ச்சியான வளர்ச்சியை உறுதிசெய்ய தாங்கள் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்