Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

நடிகர் விக்ரம் காலமானார்...வதந்திகளை நம்ப வேண்டாம்...குடும்பத்தினர் அறிவுறுத்தல்!

Priyanka Hochumin Updated:
நடிகர் விக்ரம் காலமானார்...வதந்திகளை நம்ப வேண்டாம்...குடும்பத்தினர் அறிவுறுத்தல்!Representative Image.

பாலிவுட்டின் மூத்த மற்றும் பழம்பெரும் நடிகரான விக்ரம் கோகாய் காலமானார் என்று பிரபலங்கள் சமூக ஊடகங்களில் இரங்கல் பதிவுகளைப் பகிர்ந்து கொண்டனர். இந்த செய்திக்கு அவரது குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தனர்.

82 வயதான விக்ரம் கோகாய் வயது மூப்பின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் புனேயில் உள்ள மங்கேஷ்கர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். திடீரென சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த தகவல்களுக்கு முற்றுபுள்ளி வைக்க அவரின் மகள் பத்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "எங்கள் தந்தையின் உடல்நிலை இன்னும் கிரிட்டிகளாக இருப்பதாகவும், அவர் இன்னும் இறக்கவில்லை எனவும், சீக்கிரம் அவர் உடல்நலம் சீராக இருக்க அனைவரும் பிராதிக்குமாறு" கூறியுள்ளார்.

மேலும் "தற்போது அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு சில சிறப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. நாளை காலை 10 மணியளவில் புனேயில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார். கோகலேவின் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம்" என்று அவரின் இரண்டு மகள்களும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றனர். எனவே, ரசிகர்கள் அவரின் உடல்நலம் குணமாக தங்களின் வாழ்த்துக்களையும், பிராத்தனையும் மேற்கொள்ளுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்