உளுந்தூர்பேட்டையில் 4 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டுமான பணியை சேகர் ரெட்டி தொடங்கி வைத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் திருச்சி - சேலம் செல்லும் நெடுஞ்சாலை பிரிவு அருகில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி திருக்கோயில் கட்டுவதற்கு 4 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. அந்த நிலத்தில் கோவில் கட்டுவதற்கு கடந்த ஆண்டில் முதலமைச்சராக இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.
இந்தநிலையில் இன்று அதிகாலை முதல் சிறப்பு யாக பூஜையுடன் துவங்கி வேத மந்திரங்கள் முழங்க கோமாதா பூஜை நடைபெற்றது. அதன்பின்பு கோயில் கட்டுமானப் பணியினை திருமலை திருப்பதி தேவஸ்தான ஆலோசனைக்குழு தலைவர் சேகர் ரெட்டி தலைமையில், துவங்கப்பட்டது.அறங்காவல் குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான குமரகுரு உடனிருந்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…