Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வேலூரில் ராணுவ வீரர் மனைவியிடம் மாநில மகளிர் ஆணைய தலைவி விசாரணை

Baskaran Updated:
வேலூரில் ராணுவ வீரர் மனைவியிடம் மாநில மகளிர் ஆணைய தலைவி விசாரணைRepresentative Image.

வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராணுவ வீரரின் மனைவி கீர்த்தியை மாநில மகளிர் ஆணைய தலைவி திருமதி குமாரி தலைமையிலான குழுவினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், படவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகர். இவர் காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார் . இவர் சமூக வலைதளங்களில் தனது மனைவி கீர்த்தியை அதே ஊரைச் சேர்ந்த ஒரு கும்பல் அடித்து மானபங்கம் செய்ததாகவும், காவல்துறை உடனடியாக தலையிட்டு தனது மனைவியை காப்பாற்றுமாறு  கூறியிருந்தார். இந்நிலையில்  ராணுவ வீரரின் மனைவி கீர்த்தி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கீர்த்தியை, மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி மற்றும் உறுப்பினர் சீதாபதி சொக்கலிங்கம் ஆகியோர்  நேரில் சென்று விசாரித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில மகளிர் ஆணைய தலைவி திருமதி குமாரி , ராணுவ வீரரின் மனைவிக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இருதரப்பினருக்கும் தனிப்பட்ட பிரச்சனை என்பதால் இருதரப்பிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக காவல் துறையிடமும் விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு பெண் மானபங்கம் செய்ததாக வழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதால் மகளிர் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். முழு விசாரணை காவல்துறையினர் தெரிவித்த பிறகு மகளிர் ஆணையம் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்