Mon ,Nov 11, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

கும்பகோணத்தில் கொள்ளை போன சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு...!

Muthu Kumar August 20, 2022 & 17:20 [IST]
கும்பகோணத்தில் கொள்ளை போன சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு...!Representative Image.

தஞ்சை மாவட்டம் தண்டந்தோட்டம் கிராமத்தில் உள்ள நடனபுரீஸ்வரர் சிவன் கோவிலில் இருந்த பார்வதி, சம்பந்தர், கிருஷ்ணகலிங்கநர்த்தனம், அய்யனார், அகஸ்தியர் ஆகிய 5 பஞ்சலோக சாமி சிலைகள் கடந்த 1971-ம் ஆண்டு கொள்ளையடிக்கப்பட்டது.

இந்நிலையில்,  காணாமல் போன சிலை குறித்த குறிப்புகளோ, ஆவணங்களோ இல்லாததால் விசாரணையில் முன்னேற்றம் இல்லாமல் இருந்துள்ளது. ஆனாலும், தண்டந்தோட்டம் கிராமத்தின் பொதுநலச்சங்கத்தின் தலைவர் வாசு கடந்த 2019-ம் ஆண்டு கொள்ளை போன சிலைகளை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார். 

இதனையடுத்து கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா புலன் விசாரணை நடத்தியதில், கொள்ளை போன பார்வதி சிலை அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பழங்கால கலைப் பொருட்களை விற்பனை செய்யும் கிறிஸ்டி ஏல நிறுவனத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.

அந்த சிலையை மீட்டு தமிழகம் கொண்டு வரும் நடவடிக்கையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்டு உள்ளனர்.  அதன்படி, 'யுனெஸ்கோ' ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிலையை மீட்டு கொண்டு வருவதற்கான முயற்சியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்